TIS National ஐப் பற்றி
Translating and Interpreting Service (TIS National) என்பது ஆங்கிலம் அல்லாத மொழி பேசுபவர்ர்களுக்கும், ஆங்கிலம் அல்லாத மொழி பேசும் வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ள வேண்டிய தேவையுள்ள முகவரமைப்புகள் மற்றும் வியாபாரங்களுக்கும் Department of Immigration and Border Protection வழங்கும் ஒரு உரைபெயர்ப்புச் சேவையாகும்.
TIS National:
- உரைபெயர்க்கும் தொழிற்துறையில் 40 இற்கும் மேற்பட்ட வருட அனுபவத்தைக் கொண்டுள்ளது
- அவுஸ்திரேலியா முழுவதும் 2500 இற்கும் மேற்பட்ட ஒப்பந்தமிட்ட உரைபெயர்ப்பாளர்களுக்கான அணுகலைக் கொண்டுள்ளது
- 160 இற்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுகின்ற உரைபெயர்ப்பாளர்களுக்கான அணுகலைக் கொண்டுள்ளது
நாங்கள் வழங்குபவை:
- உடனடி தொலைபேசி உரைபெயர்த்தல்.
- ATIS Voice தானியக்கப்பட்ட குரல் கட்டளையுள்ள உடனடி தொலைபேசி உரைபெயர்த்தல்.
- முன்பதிவுசெய்த தொலைபேசி உரைபெயர்த்தல்.
- நிகழ்வு நடக்கும் இடத்தில் உரைபெயர்த்தல்.
TIS National இன் உடனடி தொலைபேசி உரைபெயர்த்தல் சேவையானது, அவுஸ்திரேலியாவில் உரைபெயர்ப்பாளர் தேவைப்படுகின்ற எவருக்கும் உள்ளூர் அழைப்பின் கட்டணத்தில் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு நாளும் 24 மணித்தியாலங்களும் கிடைக்கிறது.
TIS National இன் குறிக்கோள்
சமூகத்திற்கு அணுகலையும் நடுநிலைமையையும் வழங்குவதற்கு, மொழிச் சேவைகளை அளிப்பதில், ஆங்கிலம் பேசாதவர்கள், உரைபெயர்ப்பாளர்கள், முகமை வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான அவுஸ்திரேலியாவின் பிரீமியர் தேர்வாக இருக்க வேண்டுமென்ற எங்களுடைய குறிக்கோளை பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
TIS National இன் வரலாறு
TIS National இன் வரலாறு மற்றும் அவுஸ்திரேலியாவிலுள்ள மொழிச் சேவைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
அணுகல் மற்றும் நடுநிலைமை
அணுகல் மற்றும் நடுநிலைமை என்பது அவுஸ்திரேலிய மக்களின் கலாச்சார ரீதியான, மொழி ரீதியான அல்லது சமயம் ரீதியான பின்னணிகளைப் பொருட்படுத்தாமல், சமமாக அரசாங்கத் திட்டங்களையும் சேவைகளையும் அணுகக் கூடியதாக அவர்கள் எல்லோரும் இருக்க வேண்டும் என்பதைப் பிரதிபலிக்கிறது. அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அணுகல் மற்றும் நடுநிலமை கொள்கைக்கு TIS National எப்படி ஆதரவளிக்கிறது என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
TIS National வெளியீடுகள் மற்றும் விளம்பரங்கள்
பல வகையான வெளியீடுகள் மற்றும் விளம்பரப் பொருட்கள் இந்தத் தளத்தின் ஊடாக பதிவிறக்குவதற்கு அல்லது உத்தரவிட்டு வாங்குவதற்குக் கிடைக்கின்றன.
Share this page
Facebook Twitter