TIS National உரைபெயர்ப்பாளர்களைப் பயன்படுத்துகின்ற நிறுவனங்கள்
TIS National ஊடாக நான் யாரைத் தொடர்புகொள்ளலாம்?
TIS National ஆனது அவுஸ்திரேலியா முழுவதுமுள்ள பல தரப்பட்ட வகையான முகவரமைப்புகளுக்கும் அலுவல்களுக்கும் உரைபெயர்ப்புச் சேவைகளை வழங்குகிறது.
TIS National உடன் Department of Immigration and Border Protection உட்பட்ட 20,000 இற்கும் மேற்பட்ட முகவரமைப்புகள் தம்மைப் பதிவுசெய்துள்ளன.
எங்களுடைய வாடிக்கையாளர்களில் சிலர் வருமாறு:
- மாநில மற்றும் கூட்டரசு அரசாங்கத் திணைக்களங்கள்
- உள்ளூராட்சி சபைகள்
- மருத்துவ மற்றும் உடல்நல வைத்தியர்கள்
- மருந்தகங்கள்
- பயனுடைமை நிறுவனங்கள்
- தொலைத்தொடர்புக் கம்பனிகள்
- அவசர சேவைகள்
- சட்ட சேவைகள்
- குடியேற்றம் மற்றும் சமூக சேவை வழங்குநர்கள்.
வைத்தியம்சார் உரைபெயர்த்தல்
பொது வைத்தியர்களும் (GPகள்) வைத்திய நிபுணர்களும் சேவைகளை பின்வரும் வகையில் வழங்கும் போது, அவர்கள் வருடம் முழுவதும் தினமும் 24 மணித்தியாலங்களும் TIS National ஊடாக இலவச உரைபெயர்ப்புச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
- சேவைகளுக்கு மெடிகெயாரின் கீழ் பணத்தைக் கோரலாம்
- சேவைகள் தனியார் வைத்திய நடவடிக்கைகளில் அளிக்கப்படுகின்றன
- அவுஸ்திரேலியப் பிரஜைகள், நிரந்தர வதிவிடதாரர்கள், தற்காலிக மனிதாபிமான அடிப்படையில் தங்குபவர்கள் (Temporary Humanitarian Stay) (உபவகுப்பு 449) ; தற்காலிக மனிதாபிமான அடிப்படையில் கவனத்திலெடுக்கப்பட்டவர்கள் (Temporary Humanitarian Concern) (உபவகுப்பு 786); தற்காலிக பாதுகாப்பு (Temporary Protection) (உபவகுப்பு 785); மற்றும் பாதுகாப்புப் புகலிட நிறுவன (Safe Haven Enterprise) (உபவகுப்பு 790) விசா வைத்திருப்பவர்கள் முதலிய ஆங்கிலம் அல்லாத மொழியைப் பேசுபவர்களுக்கு சேவைகள் அளிக்கப்படுகின்றன.
உங்களுடைய பொது வைத்தியர் அல்லது வைத்திய நிபுணர் TIS National இல் பதிவுசெய்யவில்லை என்றால், எப்படிப் பதிவுசெய்வது என்பதை அறிய TIS National இணையத்தளத்தைப் பார்க்குமாறு அவரிடம் கூறுங்கள்.
Share this page
Facebook Twitter