பாவனை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

1. பொது

  1. உரைபெயர்ப்புச் சேவைகளை வழங்குவதற்காக Translating and Interpreting Service (“TIS National”) வழங்கும் இந்தத் தளத்தையும் சேவைகளையும் நீங்கள் உபயோகிப்பது கீழே விளக்கப்படுகின்ற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் தளம் அல்லது இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் (“விதிமுறைகள்”) தோன்றும், அதைக் குறிப்பிடும் அல்லது அதனுடன் இணைக்கப்படுகின்ற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் எதற்கும் உட்படும். கீழேயுள்ள சரத்து 1(2) இற்கு உட்பட்டு, ஏதேனும் ஒத்திசைவின்மை அல்லது முரண்பாடு ஏற்படும் பட்சத்தில், கீழே விளக்கப்படுகின்ற விதிமுறைகளும் நிபந்தனைகளும் வழக்கத்திலிருக்கும்.
  2. உரைபெயர்த்தல் சேவைகளை வழங்குவதற்காக TIS National உடன் நீங்கள் ஒரு ஒப்பந்தத்தைத் தனியாகச் செய்துகொண்டால், விதிமுறைகளுடனான எந்தவொரு ஒத்திசைவின்மை அல்லது முரண்பாட்டின் எல்லைக்கும் அந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் வழக்கத்திலிருக்கும்.
  3. நீங்கள் இந்த விதிமுறைகளை ஏற்காவிட்டால், நீங்கள் இணையத்தை அல்லது TIS National வழங்குகின்ற சேவைகள் எதையும் உபயோகிக்காமல் கைவிட வேண்டும்.
  4. 6 Chan Street, Belconnen ACT 2617 இலுள்ள Department of Immigration and Border Protection ABN 33 380 054 835 ஆல் பிரதிநிதித்துவம் செய்யப்படும் அவுஸ்திரேலிய பொதுநலவாயம் அல்லது அதனைத் தொடர்ந்து பதவியில் அமர்பவர் (“எங்களுக்கு”, “எங்களுடைய”, “நாங்கள்”, “திணைக்களம்” அல்லது “பொதுநலவாயம்”) தான் TIS National இன் மற்றும் TIS National வழங்கும் இணையத்தளம் மற்றும் சேவைகளின் நிர்வாகி.

2. உரைபெயர்ப்பு

  1. இந்த விதிமுறைகளில்:
    1.  “நீங்கள்” மற்றும் “பயனர்” என்பது முகமைகள், நிறுவனங்கள், உரைபெயர்ப்பாளர்கள் மற்றும் தனிநபர்கள் உட்பட, TIS National வழங்கும் இணையத்தளம் அல்லது சேவைகளைப் பார்க்கும் மற்றும்/அல்லது பயன்படுத்தும் எவரையும் குறிக்கிறது;
    2.  “இணையத்தளம்” என்பது https://www.tisnational.gov.au/ மற்றும்/அல்லது https://tisonline.tisnational.gov.au-ஐக் குறிக்கிறது;
    3. இந்த விதிமுறைகளுக்கு உள்ளாகும் TIS National வழங்கும் சேவைகளில் அடங்குபவை:
      1. இணையத்தளத்தில் உள்ள ஒன்லைன் படிவத்தை, மின்னஞ்சலைப் பயன்படுத்தி அல்லது தொலைபேசி மூலம் TIS National வாடிக்கையாளராகப் பதிவுசெய்தல்;
      2. இணையத்தளத்தில் உள்ள ஒன்லைன் படிவத்தை, மின்னஞ்சலைப் பயன்படுத்தி அல்லது தொலைபேசி மூலம் ஒரு TIS National கணக்கை உருவாக்குதல் அல்லது TIS National கணக்கைப் பயன்படுத்துதல்;
      3. TIS National சுயவிவரத்தை (“TIS National”) உருவாக்குதல் மற்றும் பயன்பாடு உட்பட, சுய முகாமைத்துவம் செய்த ஒன் -சைற் உரைபெயர்ப்பு முன்பதிவுகளுக்காக TIS National தன்னியக்க முன்பதிவு முறைக்காகப் பதிவுசெய்தல் மற்றும் பயன்படுத்துதல்;
      4. மொழிபெயர்ப்புச் சேவைகளுக்காக ஒன்லைனிலும் தொலைபேசியிலும் முன்பதிவு செய்தல்;
      5. ஒன்லைனிலும் தொலைபேசியிலும் மொழிபெயர்ப்புச் சேவைகளைச் செய்தல்;
      6. ATIS Voice ஐ அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்குமான பயன்பாடுகள்;
      7. இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒன்லைன் படிவத்தைப் பயன்படுத்தி TIS National உடன் ஒரு உரைபெயர்ப்பாளராக இணைவதற்கான விண்ணப்பங்கள்;
      8. இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒன்லைன் படிவத்தைப் பயன்படுத்தி விளம்பரத் தகவல்களுக்கான உத்தரவுகள்; மற்றும்
      9. அவ்வப்போது TIS National ஆல் தீர்மானிக்கப்பட்ட வேறு ஏதேனும் சேவைகள் (ஒன்றாக, “TIS National சேவைகள்”); மற்றும்
      10. ஒன்லைன் படிவத்தைப் பயன்படுத்தி பின்னூட்டத்தை வழங்குதல்;
    4. ஒருமை என்பது பன்மையை உள்ளடக்கும், இதன் மறுதலையும் பொருந்தும், பாலினம் என்பது மற்றைய பாலினங்களைக் குறிக்கிறது;
    5. வரையறுக்கப்பட்ட சொல் அல்லது வெளிப்பாட்டின் இன்னொரு இலக்கண வடிவம் அதற்குரிய அர்த்தத்தைக் கொண்டுள்ளது;
    6.  ஆவணம், வெளியீடு, பொதுநலவாயக் கொள்கை அல்லது உபகரணத்திற்கான குறிப்பு என்பது அவ்வப்போது திருத்தப்பட்டு, நிரப்பப்பட்டு அல்லது மாற்றப்பட்டுள்ள ஆவணம், வெளியீடு, பொதுநலவாயக் கொள்கை அல்லது உபகரணத்திற்கான குறிப்பாகும்;
    7. A$, $A, AUD, டொலர் அல்லது $ எனக் குறிப்பிடப்படுவது தனியாகக் கூறினால் அன்றி அவுஸ்திரேலிய நாணயத்தையே குறிக்கும்;
    8. நேரத்திற்கான குறிப்பு, கடமைப் பொறுப்பு செய்யப்படுகின்ற இடத்திலுள்ள அல்லது ஏதேனும் ஐயுறவு இருந்தால் அவுஸ்திரேலியத் தலைநகர்ப் பிராந்தியத்திலுள்ள (“ACT”) நேரமாகும்;
    9. தரப்பு எனக் குறிப்பிடுவது தரப்பின் நிறைவேற்றுநர்கள், நிர்வாகிகள், பின் தொடர்ந்து பதவியில் அமர்பவர்கள் மற்றும் நியமிக்கப்பட்ட வாரிசுகள் மற்றும் பதிலாட்களை உள்ளடக்கும்;
    10. நபர் எனக் குறிப்பிடுவது இயற்கையான நபர், கூட்டாளி, நிறுவனக் கூட்டவை, கழகம், அரசாங்க அல்லது உள்ளூர் அதிகாரசபை அல்லது முகமை அல்லது பிற சிறுநிறுவனம் முதலியவற்றைக் குறிக்கிறது;
    11. பயனர் ஒரு அறங்காவலர் என்றால், பயனர் அந்த விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு, தனிப்பட்ட முறையிலும், ஒரு அறங்காவலர் என்ற முறையில் அவருடைய ஆற்றலுக்கு ஏற்பவும் ஒப்பந்தத்தைச் செய்து, அந்த விதிகளின் கீழ் அதன் கடமைப்பொறுப்புகளைப் புரியும் அதிகாரம் உண்டு என்று உறுதியளிக்கிறார்;
    12. விதி, அவசரச் சட்டம், கோட்பாடு அல்லது பிற சட்டம் போன்ற சொற்களின் பாவனை இதன் கீழுள்ள ஒழுங்குமுறைகள் மற்றும் மற்ற வழிமுறைகளை மற்றும் அவற்றில் எதனதும் பலப்படுத்துதல்கள், திருத்தங்கள், மீள் சட்டங்கள் அல்லது மாற்றீடுகளை அடக்குகிறது;
    13. பொதுவான சொற்களின் பொருள் “உட்பட”, “உதாரணமாக” அல்லது இதைப் போன்ற சொற்களைச் சேர்ப்பதன் மூலம் குறிப்பிட்ட உதாரணங்களால் மட்டுப்படுத்தப்படவில்லை;
    14. இரண்டு அல்லது அதிக தரப்புகளால் (ஒரே வரையறுக்கப்பட்ட சொல்லில் இரண்டு அல்லது பல நபர்கள் உள்ளடக்கப்படுவது உட்பட) செய்யப்படும் ஏதேனும் ஒப்பந்தம், பிரதிநிதித்துவம், உத்தரவாதம் அல்லது இழப்பீடு அவர்களை கூட்டாகவும் தனித்தனியாகவும் கட்டுப்படுத்துகிறது;
    15. இரண்டு அல்லது அதிக தரப்புகளுக்காக (ஒரே வரையறுக்கப்பட்ட சொல்லில் இரண்டு அல்லது பல நபர்கள் உள்ளடக்கப்படுவது உட்பட) செய்யப்படும் ஏதேனும் ஒப்பந்தம், பிரதிநிதித்துவம், உத்தரவாதம் அல்லது இழப்பீடு என்பது கூட்டாகவும் தனித்தனியாகவும் அவர்களுக்குள்ள நன்மைக்காக ஆகும்;
    16. தரப்பு இந்த ஒப்பந்தத்தை அல்லது இந்த ஆவணங்களின் ஏதேனும் பகுதியைத் தயாரிப்பதற்குப் பொறுப்பாக இருந்ததால், சொற்பொருள் விதி என்பது அந்தத் தரப்பின் அனுகூலமின்மைக்குப் பொருந்தாது;
    17. ஒரு கடமைப்பொறுப்பு செய்யப்பட வேண்டியது அல்லது ஒரு நிகழ்வு நடக்க வேண்டியது ஒரு குறிப்பிட்ட நாளன்று அல்லது அந்த நாளுக்கு முன்னர் என்றால், அந்த நாள் அந்த இடத்திலுள்ள வேலை நாள் அல்ல, அதாவது அந்தக் கடமைப்பொறுப்பைச் செய்ய வேண்டிய அல்லது நிகழ்வு நடக்க வேண்டிய நாள் அந்த இடத்திலுள்ள அடுத்த வேலை நாளன்று அல்லது அந்த நாளுக்கு முன்னர் ஆகும்; மற்றும்
    18. தலையங்கங்கள் இலகுவான குறிப்புக்காக மட்டுமே, அவை விளக்கத்தைப் பாதிக்க மாட்டா.

3. பயனர் ஒப்பந்தம்

  1. நீங்கள்
    1. இணையத்தளத்தை அணுகுவதன் மற்றும்/அல்லது பயன்படுத்துவதன் மூலம்; அல்லது
    2. TIS National சேவைகள் எதையும் அணுகுவதன் மற்றும்/அல்லது பயன்படுத்துவதன் மூலம்,
    நீங்கள் விதிமுறைகளை வாசித்து விட்டதாக ஒப்புக்கொண்டு, அவற்றுக்குக் கட்டுப்படுவதாக ஏற்கிறீர்கள், மேலும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் உருவாக்கப்படுகிறது (“ஒப்பந்தம்”).
  2. இந்த விதிமுறைகள் அறிவிப்பு எதையும் கொடுக்காமல் எந்த நேரத்திலும் திருத்தப்படலாம், இந்த இணையத்தளத்தையும் TIS National சேவைகளையும் நீங்கள் அணுகுவதும் உபயோகிப்பதும் அறிவிப்பு எதுவுமின்றி எந்த நேரத்திலும் நிறுத்தப்படலாம். இந்த விதிமுறைகளில் திருத்தத்தைச் செய்த பின்னரும் நீங்கள் இந்த இணையத்தளத்தையும் TIS National சேவைகளையும் தொடர்ந்து பயன்படுத்தினால், நீங்கள் திருத்தப்பட்ட விதிமுறைகளை வாசித்து, அவற்றுக்குக் கட்டுப்பட இணங்கியுள்ளீர்கள் எனற சம்மதத்தை வழங்கும். நீங்கள் இணையத்தளத்தை உபயோகிக்கும் ஒவ்வொரு தடவையும் மற்றும் TIS National சேவைகளை உபயோகிக்கும் முன்னரும், திருத்தங்களுக்கான விதிமுறைகளை மீளாய்வு செய்யுமாறு உங்களுக்குச் சிபாரிசு செய்கிறோம்.

4. சட்டப்படியான அந்தஸ்து

  1. TIS National சேவைகளை உபயோகிப்பதற்கு உங்களுக்கு பதினெட்டு (18) அல்லது அதை விடக் கூடிய வயதாகியிருக்க வேண்டும்.
  2. இணையத்தளத்தை உபயோகித்து நீங்கள் செய்த ஏதேனும் முன்பதிவு அல்லது ஏதேனும் TIS National சேவைகளை உபயோகிப்பது, பின்வருபவற்றை நீங்கள் விளங்கிக்கொண்டு ஏற்கிறீர்கள் என்பதற்கு ஒரு சம்மதமாகும்:
    1. உங்களுக்கு பதினெட்டு (18) அல்லது அதை விடக் கூடிய வயது;
    2. இந்த விதிமுறைகளை ஏற்கிறீர்கள்; மற்றும்
    3. இந்த விதிமுறைகள் தொடர்பாக நீங்கள் எங்களுடன் ஒரு சட்டப்படியான ஒப்பந்தத்தை இட்டுள்ளீர்கள் என்று இணங்குகிறீர்கள்; மற்றும்
  3. வயது குறைந்த இளையவரால் உள்ளிடப்பட்ட பரிவர்த்தனையின் விளைவாக எங்களுக்கு ஏற்படக் கூடிய ஏதேனும் இழப்பு அல்லது சேதத்திற்காக, சட்ட நடவடிக்கையை எடுப்பதற்கும், அந்த முன்பதிவைச் செய்த இளையவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடமிருந்து நஷ்ட ஈட்டைக் கோருவதற்கும் உரிய உரிமையை திணைக்களம் தனதாக வைத்திருக்கிறது.

5. முன்பதிவுகள்

  1. இணையத்தளத்தில் கொடுக்கப்படும் ஒன்லைன் படிவத்தை உபயோகித்து அல்லது உங்களுடைய TIS Online கணக்கை உபயோகித்து, ஒன் சைற் உரைபெயர்ப்பு முன்பதிவு வேண்டுகோள்கள் அனைத்தையும் எழுத்தில் செய்ய வேண்டும். சாத்தியமாகவுள்ள இடத்தில், TIS Online கணக்கை உபயோகித்து அல்லது ஒன் சைற் வேலை ஒன்லைன் பதிவுப் படிவத்தைப் பூர்த்திசெய்து, ஒன் சைற் உரைபெயர்ப்பு வேண்டுகோள்களுக்காக குறைந்தது ஒரு கிழமைக்கு முன்பாகவே அறிவிப்பைக் கொடுக்க வேண்டும்.
  2. அவசரமில்லாத ஒன் சைற் உரைபெயர்ப்பு முன்பதிவு வேண்டுகோள்களை கிழமையில் 7 நாட்களும், நாளின் 24 மணித்தியாலங்களும் TIS Online இல் பதிவுசெய்யலாம்.
  3. தேவைப்படும் திகதிக்கு மூன்று (3) மாதங்கள் வரை முன்னதாக நியமனங்களுக்கான முன்பதிவுகளைச் செய்து கொள்ளலாம்.
  4. அவசர சூழ்நிலை ஏற்படும் போது, நீங்கல் எங்களை தொலைபேசி வழியாகத் தொடர்புகொள்ளலாம், ஒன் சைற் உரைபெயர்ப்பாளரை வழங்குவதற்காக எங்களால் முடிந்த நியாயமான முயற்சிகள் அத்தனையையும் செய்வோம். தொலைபேசி வழியாகத் தொடர்புகொண்ட பின்னர், முடிந்தவரை விரைவில் எழுத்திலுள்ள ஒரு வேண்டுகோளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  5. பின்வருவன போன்ற, ஒரு உரைபெயர்ப்பாளருக்கென்று தனித்துவமான தேவைகள் உங்களுக்கு இருந்தால், அவற்றை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது உங்களுடைய பொறுப்பாகும்:
    1. National Accreditation Authority for Translators and Interpreters (“NAATI”) தரநிர்ணயம்;
    2. பாலினம்; மற்றும்
    3. சேவையை வழங்குகின்ற உரைபெயர்ப்பாளரே தொடர்ந்து தேவைப்படுதல்.
  6. நீங்கள் பின்வருவனவற்றை விளங்கி ஒப்புக்கொள்கிறீர்கள்:
    1. இலத்திரனியல் செயலிழப்பு, பொறிமுறை ரீதியான, மென்பொருள், கணிப்பொறி அல்லது தொலைத்தொடர்புகள் செயலிழப்பு அல்லது மூன்றாம் தரப்பு இணையத்தளத்தை வழங்குபவர்களின் அல்லது முறைமைகளின் தவிர்ப்பு அல்லது செயலிழப்பு போன்றவை உட்பட்ட ஆனால் இவை மட்டுமல்லாத, தரப்பினரின் நியாயமான கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட காரணங்களால், இணையத்தளத்தின் (“இலத்திரனியல் நெறிமுறை”) ஊடாகச் செய்யப்படும் உங்களுடைய முன்பதிவின் அனுப்புகை எங்களுக்கு வந்துசேராமல் போகலாம்;
    2. உங்களிடமிருந்து மேலும் சம்மதத்தைப் பெறாமல் அல்லது உங்களுக்குக் குறிப்பிடாமல் இணையத்தளத்தின் ஊடாக அனுப்பப்பட்ட அல்லது வழங்கப்பட்ட சகல பூர்த்தியான முன்பதிவுகள் குறித்தும் நாங்கள் நடவடிக்கையெடுத்து, செயலாக்கலாம்;
    3. முன்பதிவை நாங்கள் நம்பகமானதாக எடுத்துக்கொள்ளலாம் மற்றும் அத்தகைய இலத்திரனியல் அறிவுறுத்தல்களை வழங்கும் அல்லது அனுப்பும் நபர்களின் நம்பகத்தன்மையை அல்லது அங்கீகாரத்தை விசாரணை செய்யவேண்டிய அல்லது அத்தகைய இலத்திரனியல் அறிவுறுத்தல்களின் துல்லியத்தையும் முழுமையையும் சரிபார்க்க வேண்டிய கடப்பாட்டின் கீழ் நாங்கள் இல்லை;
    4. முன்பதிவு வேண்டுகோள்கள் எல்லாமே எங்களால் மேற்கொள்ளப்படும் கிடைக்கும் தன்மைக்கும், உறுதிப்படுத்தலுக்கும் உட்பட்டவை. வேண்டுகோள் விடுக்கப்பட்ட உரைபெயர்ப்புச் சேவை கிடைக்கும் என்றோ, குறிப்பிட்ட ஒரு உரைபெயர்ப்பாளரே உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க நியமிக்கப்படுவார் என்றோ நாங்கள் எதுவித உத்தரவாதத்தையும் மேற்கொள்வதில்லை;
    5. எங்களுடைய தனியான மற்றும் முழுமையான விருப்பத்தில், உங்களுடைய முன்பதிவிலுள்ள ஒரு பிழை உட்பட்ட ஏதேனும் காரணத்திற்காக (அல்லது காரணமின்றி) நீங்கள் செய்த முன்பதிவு எதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது மறுக்கலாம்; மற்றும்
    6. TIS National ஒதுக்கீட்டுக் கொள்கையின் படி, உரைபெயர்ப்பாளர்களுக்கு வேலையை ஒதுக்கீடு செய்வோம். முழுக் கொள்கையை TIS National's allocation policy என்பதில் காணலாம்.
  7. பணி முன்பதிவு வேண்டுகோள் படிவத்தில் உள்ளிடப்படுகின்ற உரைபெயர்ப்பாளர் அறிவுறுத்தல்கள் தானாகவே உரைபெயர்ப்பாளர்களுக்குக் காட்டப்படும், மேலும் குறிப்பிட்ட உரைபெயர்ப்பாளர்களைக் குறிப்பிடக் கூடாது, மரியாதைக் குறைவன அல்லது அருவருப்பான குறிப்புகளைக் கொண்டிருக்கக் கூடாது அல்லது பணிக்கான குறிப்பிட்ட தேவைகளாக இருக்கக் கூடாது.
  8. அறிவுறுத்தல்கள் என்பவை ஒன் சைற் முன்பதிவின் நேரத்தில் அந்தத் தலத்தின் அமைவிடத்தைக் கண்டுபிடிப்பதற்கு உரைபெயர்ப்பாளருக்குத் தேவைப்படக் கூடிய அறிவுறுத்தல்களை மட்டுப்படுத்தியதாக இருக்க வேண்டும்.

6. இரத்துசெய்தல்கள்

  1. ஏஜென்சிகள், நிறுவனங்கள் அல்லது தனிநபர்களால் செய்யப்பட்ட ஒன்சைற் உரைபெயர்ப்பு பணிகள் அல்லது முன்பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரைபெயர்ப்பு பணிகளுக்கான இரத்துசெய்தல்களை குறித்த நியமனத்திற்கு குறைந்தது 24 மணித்தியாலங்களுக்கு முன்னதாக, இரத்துசெய்தலுக்கான தகுந்த காரணங்களுடன் எழுத்துமூலம் செய்ய வேண்டும்.
  2. ஒன்சைற் உரைபெயர்ப்பு பணி அல்லது முன்பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரைபெயர்ப்பு பணியை இரத்துசெய்ய, நீங்கள்:
    1. TIS Online ஐ உபயோகித்து முன்பதிவை மேற்கொண்டிருந்தால், TIS Online கணக்கை உபயோகித்தே அந்த முன்பதிவை இரத்துசெய்ய வேண்டும்; அல்லது
    2. TIS Online ஐ உபயோகித்து முன்பதிவை மேற்கொளாத பட்சத்தில், (பணி இலக்கம் உட்பட) பணியின் விவரங்களையும், இரத்துசெய்தலுக்கான காரணத்தையும் குறிப்பிட்டு ஒன்சைற் முன்பதிவுக் குழுவுக்கு (tis@border.gov.au) அல்லது முன்பதிவு செய்யப்பட்ட தொலைபேசி முன்பதிவுக் குழுவுக்கு (tis.prebook@border.gov.au) மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
  3. ஒன்சைற் உரைபெயர்ப்பு பணி அல்லது முன்பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரைபெயர்ப்பு பணி இரத்துசெய்யப்படும் போது மற்றும் தேவையான இரத்துசெய்தல் அறிவிப்பு வழங்கப்படாத அல்லது 24 மணித்தியாலங்களுக்குக் குறைந்த நேரத்தில் அறிவிப்பு வழங்கப்படும் போது, திட்டமிட்டவாறே உங்களிடமிருந்து அந்தச் சேவைக்கான கட்டணம் அறவிடப்படும்.
  4. 24 மணித்தியாலங்களுக்குக் குறைந்த நேரத்தில் இரத்துசெய்தல் அறிவிப்பை வழங்கிய பல நாள் உரைபெயர்ப்புக்கான முன்பதிவிற்கு, உரைபெயர்ப்பாளரின் பிரயாண நேரம் மற்றும் செலவுகள் உட்பட ஒரு முழு நாள் வேலைக்குச் சமமான இரத்துசெய்தல் கட்டணம் பெறப்படும்.

7. சேவைக் கட்டணங்கள்

  1. TIS National Interpreting Service Charges இல் இணையத்தளத்திலுள்ள சேவைக் கட்டணங்களின் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள கட்டணங்களுக்கு அமைய உங்களிடம் கட்டணத்தைப் பெறுவோம்.
  2. அரசு சாரா நிறுவனங்களுக்குரிய இலவச உரைபெயர்ப்புச் சேவைகளை அணுகுவதற்கு உங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தால், NGOகளுக்கான இலவச உரைபெயர்ப்புச் சேவை என்ற தலையங்கத்தில் இணையத்தளத்திலுள்ள விதிமுறைகளும் நிபந்தனைகளும் பொருந்தும்.
  3. இணையத்தளத்திலுள்ள சேவைக் கட்டணங்கள் அவுஸ்திரேலிய டொலர்களில் உள்ளன, அவை பொருத்தமான இடத்தில் GST-ஐயும் உள்ளடக்குகின்றன. விலைகள் எந்த நேரத்திலும் அறிவிப்பு எதுவுமின்றி மாற்றத்திற்கு உள்ளாகும்.
  4. இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பிழைகள் எதையும் திருத்தும் உரிமையைத் தக்கவைத்திருக்கிறோம்.

8. இன்வொய்ஸிங்

  1. உரைபெயர்ப்புச் சேவைகளை வழங்குவதற்குச் செலுத்தக் கூடிய தகுந்த கட்டணங்களை நீங்கள் எங்களுக்குச் செலுத்த வேண்டும், இது எங்களை ஒவ்வொரு நாட்காட்டி மாதத்திற்கும் சரியான வரி இன்வொய்ஸ்களை அனுப்ப வைக்கும்.
  2. சரியாக வழங்கப்பட்ட வரி இன்வொய்ஸ் திகதியிலிருந்து 28 நாட்களுக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
  3. இன்வொய்ஸ்கள் நியமிக்கப்பெற்ற இ-பில்லிங் மின்னஞ்சல் விலாசத்திற்கு அல்லது நியமிக்கப்பெற்ற அஞ்சல் விலாசத்திற்கு அனுப்பப்படும். TIS Online இல் இன்வொய்ஸை அணுகவோ அல்லது பணத்தைச் செலுத்தவோ முடியாது.
  4. உரைபெயர்ப்பாளர்கள்:
    1. தங்களது உரைபெயர்ப்பாளர் தொடர்பு உத்தியோகத்தரைத் தொடர்புகொண்டு நிதித் தகவலை எழுத்தில் புதுப்பிக்க வேண்டும். உரைபெயர்ப்பாளர்கள் TIS Online இல் எந்தவொரு நிதித் தகவலையும் புதுப்பிக்க அல்லது கட்டணத்தின் சாராம்சங்களைப் பார்க்க முடியாது.
    2. மின்னஞ்சல் மூலம் கட்டணத்தின் சாராம்சங்களைப் பெற இணங்குகிறார்.
  5. வரி இன்வொய்ஸில் A New Tax System (Goods and Services Tax) Act 1999 (Cth) சட்டத்திற்குத் தேவையானது போல விவரங்கள் இருந்தால், அது செல்லுபடியாகும்.

9. பயனரின் கடமைப்பொறுப்புகள்

  1. உங்களின் சார்பாக TIS Online அல்லது TIS National ஐ உபயோகிக்குமாறு அழைக்கப்படும் முகவர்களின் பாவனை எதுவும் உட்பட, உங்களுடைய TIS National கணக்கின் எந்தவொரு பாவனைக்கும் மற்றும் கடவுச்சொற்களின் நிர்வாகத்திற்கும் நீங்களே பொறுப்பாகும்.
  2. நீங்கள் வேறெந்த நபருடைய TIS National கணக்கு அல்லது TIS Online கணக்கை அணுகவோ அல்லது இணைக்கவோ அல்லது அவ்வாறு செய்ய முயற்சிக்கவோ கூடாது.
  3. வழங்கப்படும் தகவலின் உள்ளடக்கத்திற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பாகும். இதில் தரவுத்தளங்கள், மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு போன்றவற்றுக்கு வழங்கப்படும் தகவல் உட்பட இதர தகவல்களும் அடங்கும்.
  4. பின்வருபவை உட்பட, இணையத்தளம் மற்றும் TIS National சேவைகளின் பாவனையுடன் தொடர்பான சகல ஆபத்துகளையும் கவனத்தில் கொள்ளுங்கள்:
    1. இணையத்தளம் அல்லது இதை அல்லது TIS National சேவைகளை நீங்கள் அணுகுவதன் வழியாகக் கடத்தப்படக் கூடிய அல்லது செயற்படுத்தப்படக் கூடிய எந்தவொரு வைரஸாலும் உங்களுடைய கணிப்பொறி, மென்பொருள் அல்லது தரவு சேதமாக்கப்படும் ஆபத்து; அல்லது
    2. இந்த இணையத்தளம் மற்றும் இணைக்கப்பட்ட இணையத்தளங்களின் உள்ளடக்கம் எந்தவொரு நாட்டினதும் சட்டங்களுக்கு இணங்கும் ஆபத்து.
  5. நீங்கள் பின்வருபவற்றுக்கு ஒப்புக்கொள்கிறீர்கள்:
    1. எங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட பொருள், தகவல் மற்றும் தரவின் மற்ற வகைகள் எல்லாம், உங்களுடைய அறிவுக்கு எட்டியவரை உண்மையானதாகவும் பூர்த்தியானதாகவும் இருக்குமென்று. இணையத்தளம் அல்லது TIS Online ஐ உபயோகித்து தகவலைச் சமர்ப்பிக்கும் போது, ஆங்கிலம் அல்லாத மொழியைப் பேசுகின்ற வாடிக்கையாளரின் விவரங்களை வழங்க நீங்கள் விரும்பவில்லை என்றால், அந்த வேலையை “இரகசியமானது” என்று பதிவுசெய்யுங்கள் அல்லது பொருத்தமான புலத்தை வெற்றிடமாக விடுங்கள்;
    2. இணையத்தளத்தால் அல்லது ஏதேனும் TIS National சேவையால் கேட்கப்பட்டவாறு உங்களைப் பற்றிய குறிப்பிட்ட, தற்கால, முழுமையான மற்றும் துல்லியமான தகவலை வழங்குவதற்கு. நீங்கள் ஒரு ஏஜென்சி என்றால் மற்றும் பணி நோக்கங்களுக்காக உங்களுடைய பெயரைக் கொடுக்க விரும்பவில்லை என்றால், ஒரு மாற்றுப்பெயரை உபயோகியுங்கள்;
    3. உங்களுடைய தகவலைப் புதுப்பிப்பதற்காக அல்லது முன்பதிவுகளை மாற்றுவதற்காக உங்களுடைய TIS National கணக்கு அல்லது TIS Online உள&##3021;நுழைவு விபரங்களைப் பாவிக்க வேறு எவரையும் அனுமதிக்காமலிருக்க;
    4. உங்களுடைய மின்னஞ்சல், உரைபெயர்ப்பாளர் ஐ.டி அல்லது வாடிக்கையாளர் ஐ.டி இலக்கம் (பொருந்தினால்) மற்றும் கடவுச்சொல் முதலியவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்க;
    5. உங்களுடைய மின்னஞ்சல் விலாசம் அல்லது தொடர்பு விபரங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால் எங்களுக்குத் தெரிவிக்க;
    6. நாங்கள் வேண்டிக்கொண்ட ஆவணத்தை(களை) மற்றும் மற்றைய பொருட்களை வழங்க;
    7. முன்பதிவில் அல்லது உங்களுடைய பிரதிநிதித்துவங்கள் மற்றும் உத்தரவாதங்களிலுள்ள ஏதேனும் பிழைகளைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்க;
    8. TIS National சேவைகளின் உத்தேசிக்கப்பட்ட பெறுநருக்கு TIS National சேவைகளை அல்லது அறிவிப்பை TIS National வழங்குவதுடன் தொடர்பான ஏதேனும் நியாயமான வேண்டுகோள்களுடன் ஒத்துழைக்க;
    9. சட்ட ரீதியான நோக்கங்களுக்காகவும், உரிமைகளை மீறாத வகையிலும் மட்டுமே இணையத்தளத்தையும் TIS National சேவைகளையும் பாவிக்க அல்லது ஏதேனும் மூன்றாம் தரப்பால் இணையத்தளமும் TIS National சேவைகளும் பாவனை செய்வதையும் மகிழ்ச்சியடைவதையும் கட்டுப்படுத்த அல்லது தடுப்பதற்கு;
    10. இலவச உரைப் புலங்களில் மரியாதைக் குறைவான அல்லது அருவருப்பான கருத்துக்களைப் பிரசுரிக்காமல் தடுப்பதற்கு. இணையத்தளத்தில் மரியாதைக் குறைவான அல்லது அருவருப்பான கருத்துக்களை நீங்கள் பதிவுசெய்வது கண்டுபிடிக்கப்பட்டால், உங்களுடைய கணக்கு பூட்டப்படலாம், இடைநிறுத்தப்படலாம் அல்லது நிறுத்தப்படலாம்;
    11. இணையத்தளத்தையும், TIS National சேவைகளையும் பாவிப்பதில் பொதுநலவாயத்தினதும் பொருந்தக்கூடிய மாநிலங்கள், பிராந்தியங்கள் மற்றும் உள்ளூர் அதிகாரசபைகள் அனைத்தினதும் பொருத்தமான சட்டம் அனைத்துடனும் இணங்குவதற்கு, குறிப்பாக:
      1. Crimes Act 1914 (Cth);
      2. Racial Discrimination Act 1975 (Cth);
      3. Sex Discrimination Act 1984 (Cth);
      4. Disability Discrimination Act 1992 (Cth); and
      5. Equal Opportunity for Women in the Workplace Act 1999 (Cth);
    12. அங்கீகாரமற்ற முறையில் இந்த இணையத்தளத்தின் பாவனை குற்றத் தண்டனையை ஏற்படுத்தலாம்.

10. உங்களுடைய TIS National அல்லது TIS Online இன் இடைநிறுத்தம் அல்லது நிறுத்தம்

  1. எந்த நேரத்திலும் உங்களுடைய TIS Online அல்லது TIS National கணக்கை(களை)ப் பூட்டும், இடைநிறுத்தும் அல்லது நிறுத்தும் உரிமையை திணைக்களம் தனதாக்கி வைத்திருக்கிறது.

11. நீங்கள் எங்களுக்கு வழங்கும் தகவல்கள்

  1. இணையத்தளத்தில் அல்லது ஏதேனும் TIS National சேவைகளின் ஊடாக நீங்கள் தகவலைச் சமர்ப்பிக்கும் போது, இப்போதும் எதிர்காலத்தில் எந்தவொரு வழியிலும் அந்த உள்ளடக்கத்தைப் பிரசுரிக்க, கடத்த அல்லது பாவிக்க திணைக்களத்திற்கு உரிமத்தைக் கொடுக்கிறீர்கள்.
  2. நீங்கள் சமர்ப்பிக்கும் உள்ளடக்கத்தைப் பிரிசுரிக்காமல் வைக்கும் உரிமையை திணைக்களம் தனதாக்கி வைத்திருக்கிறது.
  3. நீங்கள் பங்களிக்கின்ற உரிமங்களின் மீது பதிப்புரிமை உட்பட்ட அவசியமான உரிமைகள் அனைத்தையும் வைத்திருக்கிறீர்கள் என்றும், உங்களுடைய உள்ளடக்கம் மரியாதைக் குறைவானது அல்ல என்றும், அது எந்தவொரு சட்டத்தையும் மீறவில்லை என்றும் உத்தரவாதமளிக்கிறீர்கள்.
  4. இந்த விதிமுறைகளின் படி, நீங்கள் திணைக்களத்திற்கு வழங்கும் உள்ளடக்கத்திற்கான நன்னெறி உரிமைகள் எதையும் விட்டுக்கொடுக்கிறீர்கள்.
  5. இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், TIS National சேவைகளை வழங்கும் நோக்கங்களுக்காக உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை திணைக்களம் பாவிப்பதற்கு நீங்கள் சம்மதமளிக்கிறீர்கள். எங்களுடைய விரிவான தனியுரிமை அறிக்கையை அணுகுவதன் மூலம், உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை திணைக்களம் எப்படி நிர்வகிக்கும் என்பது பற்றிய அதிக தகவல்களை நீங்கள் பெறலாம்.

12. உறவின் தன்மை

  1. விதிமுறைகளிலிருக்கின்ற எதுவுமே, திணைக்களமும் நீங்களும் கூட்டாளராக, முதல்வராக மற்றும் முகவராக ஒரு உறவில் இருப்பதாகவோ அல்லது கூட்டுத் தொழில் ஈடுபடுவதாகவோ அர்த்தம் தராது.

13. பதிப்புரிமை

  1. இந்த இணையத்தளத்திலுள்ள உள்ளடக்கத்தின் பதிப்புரிமை தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் எங்களுடைய பதிப்புரிமை அறிவித்தல் என்ற பகுதியில் உள்ளன.

14. பொறுப்புத்துறப்பு

  1. இந்த இணையத்தளத்தை அல்லது ஏதேனும் TIS National சேவைகளைப் பாவிப்பதன் மூலம், நீங்கள் பின்வரும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்:
    1. இணையத்தளம் அல்லது TIS National சேவைகளின் பாவனை உங்களுடைய சொந்த ஆபத்தின் பேரிலேயே அமையும் என்பதை வெளிப்படையாக ஏற்கிறீர்கள்.
    2. திணைக்களத்திடமிருந்து அல்லது TIS National சேவைகளின் ஊடாக உங்களுக்குக் கிடைக்கின்ற வாய்வழியான அல்லது எழுத்துமூலமான ஆலோசனை அல்லது தகவல் எதுவும், இதில் வெளிப்படையாகக் செய்யப்பட்டாலன்றி எந்தவொரு உத்தரவாதத்தையோ அல்லது பிரதிநிதித்துவத்தையோ உருவாக்காது.
    3. வெளிப்படையாகத் தெரிவித்தாலும் அல்லது மறைமுகமாகக் குறிப்பிட்டாலும், வர்த்தகப்படுத்தும் தன்மை, ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்குப் பொருத்தமாக இருக்கும் தன்மை மற்றும் மீறாமை போன்றவை உட்பட அனைத்து உத்தரவாதங்களையும் திணைக்களம் வெளிப்படையாக உரிமை துறக்கிறது.
    4. திணைக்களம் பின்வரும் எந்தவொரு பிரதிநிதித்துவத்தை அல்லது உத்தரவாதத்தைச் செய்யாது:
      1. இணையத்தளம் அல்லது TIS National சேவைகள் உங்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்யும் என்று அல்லது இணையத்தளம் அல்லது TIS National சேவைகளுக்கான அணுகலும் அவற்றின் பாவனையும் இடையூறின்றி, சரியான நேரத்தில், பாதுகாப்பாக அல்லது பிழையின்றி இருக்கும் என்று;
      2. TIS National சேவைகளின் பாவனையிலிருந்து கிடைக்கக் கூடிய விளைவுகள் தொடர்பாக அல்லது TIS National சேவைகளின் ஊடாகப் பெறப்படுகின்ற தகவல் எதனதும் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மை தொடர்பாக;
      3. இணையத்தளம் அல்லது TIS National சேவைகளின் பாவனையிலிருந்து கிடைக்கக் கூடிய உரைபெயர்ப்புச் சேவைகளின் தரம் தொடர்பாக;
      4. இணையத்தளத்தில் கொடுக்கப்படும் தகவல்களும் சேவைகளும் அறிவுசார் சொத்து உரிமைகளையோ அல்லது எந்தவொரு நபரினதும் மற்றைய உரிமைகளையோ மீறவில்லை என்று மற்றும் இணையத்தளத்திலுள்ள எந்தவொரு பொருளினதும் மறுபடியாக்கத்திற்கான பொறுப்பை திணைக்களம் அங்கீகரிப்பதில்லை அல்லது ஏற்பதில்லை என்று;
      5. இந்த இணையத்தளத்தின் உள்ளடக்கம் எந்தவொரு நாட்டினதும் சட்டங்களுக்கு இணங்கும் என்று;
      6. இணையத்தளத்தில் அல்லது எந்தவொரு இணைகப்பட்ட இத்தளத்திலும் வழங்கப்படும் தகவல் அல்லது ஏதேனும் தகவல் சேதத்தை ஏற்படுத்தாது அல்லது அதில் கணிப்பொறி வைரஸ் அல்லது வேறு ஏதேனும் குறைபாடுகள் அல்லது பிழைகள் எதுவுமில்லை என்று;
      7. எந்தவொரு காரணத்திற்காகவும் இணையத்தளம் அல்īது TIS National சேவைகளின் பொருந்தும்தன்மை தொடர்பாக; மற்றும்
      8. இளையோர் அல்லது வேறு ஒருவர் காண்பதற்காக அணுகக்கூடிய தகவலின் பொருந்தும்தன்மை தொடர்பாக.
    5. இந்த இணையத்தளத்திலுள்ள அல்லது இதனூடாக அணுகப்படும் எந்தவொரு தகவலினதும் முழுமைக்கு அல்லது துல்லியத்திற்கு திணைக்களம் பொறுப்பு எதையும் ஏற்பதில்லை மற்றும் எந்தவொரு குறித்த நோக்கத்திற்கும் அதன் பொருந்தும்தன்மை பற்றிய பிரதிநிதித்துவங்களை அல்லது உத்தரவாதங்களைச் செய்வதில்லை.
    6. இணையத்தளத்திலுள்ள தகவல் துல்லியமாகவும் விரிவாகவும் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு திணைக்களமானது சகல நியாயமான முயற்சிகளையும் எடுக்கும். இருந்தாலும் கூட, தகவல் என்பது பொருத்தமான சட்டங்களுக்கான ஒரு அடிப்படை வழிகாட்டியாக மட்டுமே கருதப்படும், மேலும் அது குறிப்பிட்ட சூழ்நிலைகளின் சிக்கல்தன்மைகளை எடுத்துக்கூறுவதில்லை. உங்களுடைய தனிப்பட்ட சூழ்நிலைகளைப் பற்றிய சுயேச்சையான ஆலோசனையை நாட வேண்டும்.
    7. சட்டத்தால் அனுமதிக்கப்படும் எல்லை வரை, பின்வருவனவற்றின் விளைவாக உங்களுக்கு நேரக்கூடிய இழப்பு, காயம் அல்லது சேதம் உட்பட, ஆனால் இவற்றுக்கென மட்டும் வரையறுக்கப்படாத, இணையத்தளம் மற்றும் TIS National சேவைகளுக்கான எந்தவொரு வழி தொடர்பாகவும் ஏற்படும் எந்தவொரு வகையினதும் இழப்பு (பின்விளைவான இழப்பு, மறைமுக இழப்பு மற்றும் ஏதேனும் இலாபங்களின் இழப்பு உட்பட), காயம் அல்லது சேதம் எதற்கும் உங்களுக்கு அல்லது வேறு ஒருவருக்கு திணைக்களம் அனைத்துப் பொறுப்பையும் விலக்குகிறது:
      1. திணைக்களத்தின் அல்லது அதன் முகவர்களின் பாகத்தில் ஏதேனும் அலட்சியத்தால் ஏற்படுத்தப்பட்டாலும் படாவிட்டாலும், இந்த இணையத்தளத்திலுள்ள அல்லது இதனூடாக அணுகப்படும் தகவலின் பாவனை அல்லது அதில் தங்கியிருத்தல்;
      2. இணையத்தளம் அல்லது TIS National சேவைகளை நீங்கள் பாவித்தல் அல்லது அணுகுதல் அல்லது இணையத்தளம் அல்லது TIS National சேவைகளை உங்களால் அணுக முடியாமை.
      3. என்ன காரணமாக இருந்தாலும் ஒரு இலத்திரனியல் கட்டளையைப் பெறத் தவறுதல் உட்பட, இணையத்தளத்திற்கு அல்லது அதிலிருந்து தகவலைக் கடத்துவதன் குறுக்கீடு அல்லது நிறுத்தம்;
      4. இணையத்தளத்தின் பாதுகாப்பான சேவையகங்களுக்கான அங்கீகரிக்கப்படாத அணுகல் அல்லது அவற்றின் பாவனை எதுவும்;
      5. எந்தவொரு மூன்றாம் தரப்பினராலும் இணையத்தளத்திற்கு அல்லது அதனூடாக கடத்தப்படக் கூடிய ஏதேனும் பிழைகள், வைரஸ்கள், ட்ரோஜன் ஹோர்ஸ்கள் அல்லது வேறு தீங்கான குறியீடு அல்லது தகவல்தொடர்புகள் உட்பட, இணையத்தளத்துடன் அல்லது TIS National சேவைகளின் பாவனையுடன் சம்பந்தப்பட்டு அல்லது தொடர்பாக நிகழுகின்ற உங்களுடைய கணிப்பொறி அமைப்பு, மென்பொருள் அல்லது தரவில் ஏற்படும் ஏதேனும் இடையூறு அல்லது அவற்றுக்கான சேதம்;
      6. எந்தவொரு இணைக்கப்பட்ட தளங்களின் எந்தவொரு நோக்கத்திற்குமான தரம் அல்லது தகுதி;
      7. இந்த இணையத்தளம் மற்றும் இணைக்கப்பட்ட இணையத்தளங்களின் உள்ளடக்கம் அவுஸ்திரேலியாவுக்கு வெளியிலுள்ள எந்தவொரு நாட்டினதும் சட்டங்களுக்கு இணங்கும் ஆபத்து; அல்லது
      8. திணைக்களங்களின் நியாயமான கட்டுப்பாடுகளையும் மீறி ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களால் அந்தத் திணைக்களங்களின் கடமையைச் செய்வதில் ஏற்படும் தாமதம், இதில் உரைபெயர்ப்பாளர்கள் இல்லாமை, மின்சார வழங்கல், வங்கிப் பணப்பரிமாற்ற முறை அல்லது தபால் விநியோகங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளின் செயலிழப்பு அல்லது குழப்பம் போன்றவையும் இதர சந்தர்ப்பங்களும் அடங்கும்.
    8. இணையத்தளத்திலுள்ள இணைப்புகள் புதியவை என்பதை உறுதிப்படுத்த திணைக்களம் தம்மால் முடிந்த அத்தனை முயற்சியையும் செய்கிறது. இணைப்புகளின் நாணயம் அந்தத் தளங்களின் உரிமையாளர்களைப் பொறுத்தவை, அவை ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துகின்றன. வேலை செய்யாத ஏதேனும் இணைப்பு இருந்தால், தொலைபேசி மூலமாக அல்லது இணையத்தளத்திலுள்ள ஒன்லைன் பின்னூட்டப் படிவம் வழியாக எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
    9. இணைக்கப்பட்ட மூன்றாம் தரப்பு இணையத்தளங்களின் உள்ளடக்கத்தின் மீது திணைக்களத்திற்கு நேரடியான கட்டுப்பாடு எதுவுமில்லை, எந்தவொரு இணைக்கப்பட்ட மூன்றாம் தரப்பு இணையத்தளங்களின் அல்லது அதன் உள்ளடக்கம் குறித்து அல்லது அவற்றைப் பாவிப்பதால் ஏற்படும் இழப்புக்கு எதுவித பொறுப்பையும் திணைக்களம் ஏற்காது.
    10. அருவருப்பான, ஆபாசமான, இளையோருக்குப் பொருத்தமில்லாத அல்லது மற்றையபடி குற்றத்திற்குரிய அல்லது வன்மமான தன்மையுள்ள தகவல்கள் அல்லது விஷயங்கள் இணைக்கப்பட்ட இணையத்தளங்களில் இடப்படும் தகவலின் விளைவாக இந்த இணையத்தளத்தின் ஊடாக அணுகப்படலாம்.
    11. இணையத்தளம் மற்றும் TIS National சேவைகளின் உங்கள் பாவனையானது பாதுகாப்பு மற்றும் பாவனைக் கண்காணிப்பின் நோக்கத்திற்காக பதிவுசெய்யப்படும் என்று ஏற்றுக்கொள்கிறீர்கள். மேலும் தகவலுக்கு, இணையத்தளத்தின் தனியுரிமை அறிக்கையை வாசிக்கவும்

15. சட்ட விலக்கு உரிமை

  1. பின்வருபவை எதிலிருந்தும் மற்றும் அவற்றுக்கு எதிராக திணைக்களம் தமது இயக்குநர்கள், உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் மற்றும் முகவர்கள் உட்பட (“சட்ட விலக்கு அளிக்கப்பட்டவர்கள்”) நீங்கள் எல்லா நேரங்களிலும் சட்ட விலக்கு உரிமையளிக்க வேண்டும் மற்றும் சட்ட விலக்கு உரிமையளிக்கப்பட்டதாக வைக்க வேண்டும்:
    1. அந்த சட்ட விலக்கு உரிமையளிக்கப்பட்ட சொத்துக்கு அல்லது எவருக்கும் ஏற்படும் இழப்பு அல்லது சேதம்;
    2. அந்த சட்ட விலக்கு உரிமையளிக்கப்பட்டவைக்கு எதிரான ஏதேனும் உரிமைகோரலுடன் சம்பந்தப்படும் இழப்பு, இதில் வழக்கறிஞர்களின்/வாடிக்கையாளர்களின் அடிப்படைச் செலவு மற்றும் நேரம், வளங்கள், ஊதியம் குழம்பியமை போன்றவற்றுக்கு திணைக்களம் செலுத்திய தொகை உட்பட்ட சட்டச் செலவுகள் அடங்கும்; அல்லது
    3. பின்வருபவற்றால் ஒருவருக்கு ஏற்படும் காயம் அல்லது மரணம்:
    4. விதிமுறைகள், இணையத்தளம் அல்லது TIS National சேவைகளைப் பயன்படுத்துவது தொடர்பாக நீங்கள் அல்லது உங்கள் முகவர் செய்யும் எந்தவொரு நடவடிக்கை அல்லது தவிர்ப்பு;
    5. விதிமுறைகளின் கீழ் அல்லது இணையத்தளம் அல்லது TIS National சேவைகளைப் பயன்படுத்துவது தொடர்பாக உங்களுடைய கடமைகளை அல்லது உத்தரவாதங்களை நீங்கள் அல்லது உங்களுடைய முகவல் மீறுவது;
    6. விதிமுறைகளின் தொடர்பாக வைத்திருக்கப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் தனிப்பட்ட தகவலை நீĨகள் அல்லது உங்களுடைய முகவர்கள் அங்கீகாரமற்றும் பாவித்தல் அல்லது வெளிப்படுத்துதல் (Privacy Act 1988 (Cth) இல் வரையறுத்துள்ளது போல); அல்லது
    7. யாருடைய நடவடிக்கையால் அந்தக் கடப்பாடு அல்லது இழப்பு ஏற்பட்டதோ அந்த நபரின் பங்கில் பிழை இருந்ததா என்பதைப் பொருட்படுத்தாமல், நீங்கள் வழங்கிய (அந்தத் தகவலிலுள்ள அறிவுரீதியான சொத்து உரிமைகள் எதனதும் மீறல் உட்பட) சட்ட விலக்களிக்கப்பட்ட எந்தவொரு தகவலையும் பாவிப்பது.
  2. சரத்து 15(1)-க்கு வரம்பிடாமல், TIS National’s allocation policy க்கு முரணாமல் உங்களுடைய முன்பதிவு பூர்த்திசெய்வதற்காக ஒரு குறித்த உரைபெயர்ப்பாளரைத் தருமாறு நீங்கள் TIS National இடம் வேண்டுகோள் விடுத்து, TIS National உம் அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டால், நீங்கள் இவற்றை ஏற்கிறீர்கள்:
    1. வேண்டுகோள் விடுக்கப்பட்ட உரைபெயர்ப்பாளரின் நியமனம் தொடர்பாக பொதுநலவாயத்திற்கு கடப்பாடு எதுவுமில்லை;
    2. பொதுநலவாயத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கை எதையும் தொடங்க மாட்டீர்கள், அவ்வாறு செய்தால், உங்களுடைய ஒப்பந்தம் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்காது என்பதற்குச் சான்றாக பொதுநலவாயம் இந்தச் சரத்து(15)2 ஐச் சார்ந்திருக்கலாம்;
    3. சரத்து 15(1) இலுள்ள சட்ட விலக்கு உரிமையானது வேண்டுகோள் விடுக்கப்பட்ட உரைபெயர்ப்பாளரின் நியமனத்துடன் தொடர்பாக பொதுநலவாயத்திற்கு எதிராகக் கொண்டு வரப்படும் அல்லது செய்யப்படும் எந்தவொரு தன்மையான சகல சட்ட நடவடிக்கைகள், உரிமை கோரல்கள், கட்டளைகள், இழப்புகள் மற்றும் தீங்கு முதலியவற்றுக்கு விரிவாக்கப்படுகிறது; மற்றும்
    4. ஒப்பந்தத்தில் உள்ளதோ இல்லையோ எந்தவொரு தன்மையான சகல சட்ட நடவடிக்கைகள், உரிமை கோரல்கள், கட்டளைகள், இழப்புகள் மற்றும் தீங்கு முதலியவற்றிலிருந்து பொதுநலவாயத்தை விடுவிக்க மற்றும் என்றைக்கும் வெளியேற்ற.
  3. சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக, சரத்து 15(2) இவர்களுக்குப் பொருந்தும்:
    1. அந்தத் தனிநபரின் சார்பாக சரத்து 15(2) இன் கீழ் வேண்டுகோளைச் செய்துள்ளவர்; மற்றும்
    2. அந்த நிறுவனம் அல்லது ஏஜென்சியின் சார்பாக சரத்து 15(2) இன் கீழ் வேண்டுகோளைச் செய்துள்ள ஏஜென்சி அல்லது நிறுவனம்,
    ஆனால் 15(3)(ii) பொருந்துகின்ற அளவுக்கு நிறுவனம் அல்லது ஏஜென்சியின் சார்பாக வேண்டுகோளைச் செய்துள்ள தனிநபருக்குப் பொருந்தாது.
  4. திணைக்களத்தை சட்ட விலக்குச் செய்யும் உங்களுடைய பொறுப்புகள் திணைக்களத்தால் செய்யப்படும் விதிமுறை மீறல் அல்லது தொடர்பான பொறுப்பு அல்லது இழப்புக்கு பங்களித்த திணைக்களத்தின் பங்கில் பிழையை உள்ளடக்குகின்ற சட்டம் அல்லது தவிர்ப்பு எதனதும் அளவுக்கு ஏற்ப விகிதாசாரப்படி குறைக்கப்படும்.
  5. சட்ட விலக்கு அளிக்கப்படும் உரிமையானது சட்டத்தால் அளிக்கப்படும் வேறெந்த உரிமை, அதிகாரம் அல்லது நிவாரத்திற்கும் கூடுதலாகவே இருக்கும் அவற்றைத் தவிர்த்து இருக்காது.

16. தனியுரிமை

  1. உங்களுடைய தனிப்பட்ட தகவலை Privacy Act 1988 (Cth) போன்ற சட்டங்கள் பாதுகாக்கின்றன, மேலும் உங்களுடைய TIS National கணக்கு மற்றும் TIS Online கணக்கு மற்றும் சுயவிவரம் உட்பட, இணையத்தளத்தை உருவாக்கி நிர்வகிப்பதற்காக அத்தகவலை நாங்கள் சேகரிக்கிறோம்.
  2. நீங்கள் இணங்கியுள்ள அல்லது சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட TIS National சேவைகளை உங்களுக்கு வழங்கும் நோக்கத்திற்காக நாங்கள் உங்களுடைய தகவல்களை பாவிக்கலாம் அல்லது பிறருக்கு வழங்கலாம்.
  3. தனியுரிமை அறிக்கை யில் உள்ள எங்களுடைய தனியுரிமை அறிக்கையை விளங்கிக்கொண்டு, ஏற்கிறீர்கள்.

17. தகவல்தொடர்புகள்

  1. TIS Online கணக்குகளில் பதிவுசெய்துள்ள பயனர்கள் அவ்வப்போது ஒன் சைற் பதிவுகள் தொடர்பான மின்னஞ்சலையும் குறுஞ்செய்தி அறிவிப்புகளையும் பெற்றுக்கொள்ள இணங்குகிறீர்கள். பயனரின் விருப்பத்தேர்வுகள் TIS Online சுயவிவரத்தில் விளக்கப்படலாம்.
  2. உரைபெயர்ப்பாளர்கள் தங்களுடைய எதிர்கால அல்லது சாத்தியமுள்ள ஒன் சைற் பதிவுகள் பற்றிய மின்னஞ்சலையும் குறுஞ்செய்தி அறிவிப்புகளையும் பெற்றுக்கொள்ள இணங்குகிறார்கள். எதிர்பார்த்தது போல உங்களுக்கு மின்னஞ்சல் அறிவிப்பு கிடைக்கவில்லை என்றால், உங்களுடைய ஸ்பாம் கோப்புறைகளைச் சோதித்து, உங்களுடைய நம்பிக்கையான அனுப்புநர்கள் பட்டியலில் எங்களைச் சேர்த்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்துங்கள்.
  3. noreply@TISNational.gov.au இடமிருந்து வரும் மின்னஞ்சல்களுக்குப் பதிலனுப்பாதீர்கள். இது மேற்பார்வை செய்யப்படாத இன்பொக்ஸ் மற்றும் இங்கு வரும் அறிவிப்புகள் எதுவும் TIS National ஆல் ஏற்கப்பட்டது என்ற பொருளைத் தராது.
  4. TIS National No Reply இடமிருந்து உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தால், அதற்குப் பதிலனுப்ப வேண்டாம். இது மேற்பார்வை செய்யப்படாத கணக்கு மற்றும் இங்கு வரும் அறிவிப்புகள் எதுவும் TIS National ஆல் ஏற்கப்பட்டது என்ற பொருளைத் தராது.
  5. நாங்கள் அவ்வப்போது TIS National இணையத்தளத்தின் ஊடாக சேவைகளுக்கான மாற்றங்களைப் பற்றிய தகவலைத் தருகிறோம். TIS National சேவைகளின் விநியோகத்தைப் பாதிக்கக் கூடிய ஏதேனும் பொதுவான தகவல் மற்றும் தகவல்தொடர்புகளுக்கு இணையத்தளத்தை வாசிக்க வேண்டும்.
  6. நீங்கள் இ-தகவல்தொடர்புகளைப் பெறுவதற்கு சந்தா செலுத்தியிருந்தால், மின்னஞ்சலின் ஊடாக சேவை மாற்றங்கள் பற்றிய செய்திகள் உருப்படிகளையும் தகவலையும் நீங்கள் பெறக் கூடும். நீங்கள் எந்த நேரத்திலும் சந்தாவிலிருந்து விலகலாம்.

18. பாதுகாப்பு

  1. உங்களுடைய தகவல் பாதுகாப்பாக உள்ளது, துல்லியமாகப் பதிவுசெய்யப்படுகிறது மற்றும் சிதையவோ மாற்றப்படவோ இல்லை என்பதை உறுதிசெய்வதற்காக திணைக்களம் தன்னாலான நியாயமான முயற்சிகள் எல்லாவற்றையும் செய்யும்.
  2. திணைக்களம் உங்களுடைய தகவலின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருக்கும் அதேவேளை, அது TIS National அமைப்புகளின் ஊடாகச் சேகரிக்கப்படுகிறது, அவற்றில் சேமிக்கப்படுகின்றன அல்லது கடத்தப்படுகின்றன.
  3. மற்ற ஏஜென்சிகள் உங்களுடைய தகவலின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருக்கும் அதேவேளை, தமது கட்டுப்பாட்டுக்குள் உள்ள அமைப்புகளின் ஊடாகச் சேகரிக்கப்படுகிறது, அவற்றில் சேமிக்கப்படுகின்றன அல்லது கடத்தப்படுகின்றன. TIS National Security இலுள்ள எங்களுடைய இணையத்தளத்தின் பாதுகாப்புத் தொடர்பான எங்களுடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் விளங்கிக்கொண்டு, ஏற்கிறீர்கள்.

19. பதிவுகள்

  1. கேட்பவர்கள் மட்டும் உடனும் பாவிப்பதற்காகவே உரைபெயர்ப்புச் சேவைகள் அளிக்கப்படுகின்றன. முன்கூட்டிய எழுத்துமூல அங்கீகாரத்தை நாங்கள் வழங்கினால் அன்றி, உரைபெயர்ப்புச் சேவைகளை வழங்கிக் கĭண்டிருக்கையில் பதிவுகளை மேற்கொள்ளக் கூடாது, பயிற்சிக்காகவும், தரத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் உரைபெயர்ப்புச் சேவைகளைப் பதிவுசெய்யும் உரிமையை TIS National தனதாக்கியுள்ளது, இது மேலுள்ள சரத்டு 16 இன் கீழ் அதன் கடப்பாடுகளுக்கு இணங்க நடைபெறும்.

20. பிரிக்கப்படும் தன்மை

  1. இந்த விதிமுறைகளின் பாகம் ஏதாவது வெறுமையாக, தவறாக, சட்டத்திற்குப் புறம்பாக அல்லது அமுல்படுத்த முடியாததாக இருந்தால், அந்தப் பிரிவு இந்த விதிமுறைகளிலிருந்து பிரிக்கப்பட்டதாகக் கருதப்படும், மீதியாகவுள்ள விதிமுறைகளும் இந்த விதிமுறைகளின் பிரிவுகளும் அமுலிலேயே இருக்கும், உங்களுக்கும் திணைக்களத்திற்கும் இடையிலுள்ள ஒப்பந்தத்தை அதிகாரமுள்ளதாக்கும்.

21. உரிமை துறப்பு

  1. இந்த விதிமுறைகளின் கீழுள்ள ஏதேனும் உரிமையை அல்லது பிரிவைப் பயனுள்ளதாக்க அல்லது அமுல்படுத்த திணைக்களம் தவறினால் அத்தகைய உரிமையில் அல்லது பிரிவின் உரிமை துறப்புக்கு அது வழிவகுக்காது. இந்த விதிமுறைகளின் கீழுள்ள ஏதேனும் உரிமைகள் அல்லது பிரிவுகள், எழுத்தில் இருந்து எங்களால் கையொப்பமிடப்பட்டால் மட்டுமே அமுலில் இருக்கும்.

22. முடிப்பு

  1. நீங்கள் விதிமுறைகளை எதிர்த்தால் அல்லது விதிமுறைகளுக்கு பின்விளைவான மாற்றங்களைச் செய்தால் அல்லது TIS National சேவைகளில் எந்த வகையிலாவது உங்களுக்குத் திருதியில்லை என்றால், உங்களுடைய உடனடிப் புகலிடம் இணையத்தளத்தின் அல்லது TIS National சேவையின் பாவனையை இடையில் விடுவது, இச்சந்தர்ப்பத்தில் இந்த விதிமுறைகளுக்கு இணங்க செலுத்தவேண்டியுள்ள தொகை எதையும் நீங்கள் எங்களுக்குச் செலுத்திவிட வேண்டும்.

23. கட்டுப்படுத்தும் சட்டம்

  1. ACT இன் சட்டங்களால் இந்த விதிமுறைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன, அதற்கிணங்க உரைபெயர்க்கப்படுகின்றன. மேலும் நீங்கள் ACT நீதிமன்றங்களின் தனித்துவமற்ற சட்ட எல்லைக்கு மாற்ற இயலாத வகையில் கீழ்ப்படிகிறீர்கள்.
  2. ACT தவிர்ந்த வேறு சட்ட எல்லையில் இணையத்தளத்தை அணுகுகிறீர்கள் என்றால், அந்தச் சட்ட எல்லைக்குள் உள்ள சட்டங்களுக்குப் பொருந்தும் அளவு வரை இணக்கமாக இருப்பது உங்கள் பொறுப்பாகும்.
அவ்வப்போது இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றும் உரிமையை நாங்கள் தக்கவைத்திருக்கிறோம்.