TIS National இன் வரலாறு
அவுஸ்திரேலியாவில் மொழிச் சேவைகளை வழங்குவதில் Translating and Interpreting Service (TIS National) இற்கு நீண்டதொரு வரலாறு உள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான இடப்பெயர்வுத் திட்டத்தின் விளைவாக 1947 ஆம் ஆண்டில் பொதுநலவாய மொழிபெயர்ப்புச் சேவைகள் தொடங்கின. அவுஸ்திரேலியாவில் புதிய குடிபெயர்வாளர்கள் குடியேறிய போது, மொழிச் சேவைகளுக்கான தேவையும் ஏற்பட்டது. விளைவாக, இந்தத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் பொருட்டு Red Cross மற்றும் பொதுநலவாய அரசாங்கம் ஆகியவை மொழிபெயர்ப்புச் செயல்பாடுகளை மேற்கொள்ள ஆரம்பித்தன.
இந்தச் செயல்பாடுகளுக்கான பொறுப்பை Department of Immigration and Border Protection (இது அப்போது Department of Immigration என்று கூறப்பட்டது) ஏற்றுக்கொண்ட காலமான 1958 டிசம்பர் மாதத்தில் இச்சேவைகள் பொதுநலவாய அரசாங்க மொழிச் சேவைகளுக்குள் ஒன்றுசேர்க்கப்பட்டன. இன்று இச்சேவை TIS National எனப்படுகிறது.
TIS National இற்கான முக்கிய திகதிகள்
1947: பொதுநலவாய மொழிபெயர்ப்புச் சேவை ஆரம்பித்தது.
1958: Department of Immigration மொழிபெயர்ப்புச் செயல்பாடுகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டது.
1973: ஆங்கிலம் அல்லாத மொழியைப் பேசுபவர்களுக்கு உதவுவதற்கு ஒரு இலவச அவசரநிலை தொலைபேசி உரைபெயர்ப்புச் சேவையை திணைக்களம் ஸ்தாபித்தது.
1991: தொலைபேசி உரைபெயர்ப்புச் சேவையும் அரசாங்கம் தலைமை வகித்த மொழிபெயர்ப்புகள் அலகும் ஒன்றாக்கப்பட்டு, Translating and Interpreting Service என்ற பெயர் சூட்டப்பட்டது.
1998: அவுஸ்திரேலியா முழுவதும் இருந்த ஒன்பது தலங்களிலிருந்து Translating and Interpreting Service ஆனது மெல்போர்ன், பெர்த் மற்றும் சிட்னி ஆகிய மூன்று இயக்கத்திற்குரிய தலங்களாக ஒன்றுசேர்க்கப்பட்டது.
2002: Translating and Interpreting Service ஆனது மெல்போர்னில் அமைந்த ஒரு தலமாக ஒன்றுசேர்க்கப்பட்டு, Translating and Interpreting Service (TIS National) என்ற பெயரைப் பெற்றது.
2013: Department of Immigration and Citizenship (DIAC) இற்கு Department of Immigration and Border Protection (DIBP) என்ற பெயர் சூட்டப்பட்டது.
2015: Department of Immigration and Border Protection மற்றும் Australian Customs and Border Protection Service ஆகியவை 2015 ஜூலை 1 ஆம் திகதியன்று ஒரே புதிய திணைக்களமாகின.
Share this page
Facebook Twitter