உரைபெயர்ப்பாளரைத் தொடர்புகொள்ள உங்களுக்கு உதவும் பொருட்கள்

Translating and Interpreting service (TIS National) ஆனது உங்களுக்கு உதவுவதற்காக பல தரப்பட்ட பொருட்களை அளிக்கிறது.

பார்ப்பதற்கு, சேமிப்பதற்கு அல்லது உடனடியாக அச்சிடுவதற்கு இலத்திரனியல் வடிவத்தில் பல தரப்பட்ட பொருட்கள் கிடைக்கின்றன.

மொழி அடையாள அட்டை

மொழி அடையாள அட்டை என்பது நீங்கள் கதைக்கின்ற மொழியை முகமை வாடிக்கையாளருக்கு அடையாளப்படுத்த உங்களுக்கு உதவும் ஒரு கருவியாகும்.

Image of Language card

PDF மொழி அடையாள அட்டை (376Kb)

எனக்கு ஒரு உரைபெயர்ப்பாளர் தேவை அட்டை

சிறு பை அளவான எனக்கு ஒரு உரைபெயர்ப்பாளர் தேவை அட்டையானது நீங்கள் ஆங்கிலம் கதைக்கின்ற ஒருவருடன் தொடர்புகொள்ள வேண்டிய தேவை ஏற்படும் போது, உரைபெயர்ப்பாளரை வேண்டுகோள் விடுக்க உங்களுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

TIS National Interpreter card image

PDF எனக்கு ஒரு உரைபெயர்ப்பாளர் தேவை அட்டை (93Kb)

TIS National வியாபார அட்டை

TIS National வியாபார அட்டை ஆனது TIS National சேவைகளை உபயோகிப்பவர்கள் பாவிப்பதற்காக எண்ணப்படுகிறது. இந்த அட்டைகள், TIS National தொலைபேசி எண்ணை சுலபமாக அணுகத்தக்க வகையில் வைத்திருக்கும் ஒரு வசதியான வழியாகும்.

TIS National Business card image

PDF TIS National வியாபார அட்டை (89Kb)