பல்கலாச்சார அணுகல் மற்றும் நடுநிலைமை

பல்கலாச்சார அணுகல் மற்றும் நடுநிலைமை என்றால் என்ன?

கலாச்சாரப் பின்னணியையோ மொழித் தேவைகளையோ பொருட்படுத்தாமல், சகல அவுஸ்திரேலியர்களும் அரசாங்கக் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் சேவைகளை சமமாக அணுகுவதற்குத் தகுதியுள்ளவர்கள்.

அவுஸ்திரேலிய அரசாங்கம் வலிமையூட்டிய பல்கலாச்சார அணுகல் மற்றும் நடுநிலைமைக் கொள்கை ஊடாக இதைச் செய்யக் கடமைப்பட்டுள்ளது

இது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சகல திட்டங்களும் சேவைகளும்:

  • நேர்மையானதாக
  • அணுகுவதற்குச் சுலபமானதாக
  • பாவனைக்கு எளியதாக
  • அவுஸ்திரேலியாவின் பல்வகைத்தன்மையுள்ள சமூகத்தின் கலாச்சார மற்றும் மொழி ரீதியான தேவைகளுக்குப் விடையளிப்பதாக இருக்க வேண்டுமென இலக்குவைக்கிறது.

முழு அரசாங்க அணுகுமுறை பற்றிய மேலும் தகவல்களை Department of Social Services இணையத்தளத்தில் காணலாம்.

அவுஸ்திரேலிய சமூகத்திற்கு பல்கலாச்சார அணுகலையும் நடுநிலைமையையும் TIS National எப்படி அளிக்கிறது?

TIS National ஆனது அவுஸ்திரேலிய சமூகத்திற்கு பல்கலாச்சார அணுகலையும் நடுநிலைமையையும் இவ்வாறு அளிக்கிறது:

  • வருடம் முழுவதும் தினமும் 24 மணித்தியாலங்களும் உடனடித் தொலைபேசி உரைபெயர்ப்பாளர் சேவையை வழங்குவதன் மூலம்
  • ஆங்கிலம் அல்லாத மொழியைக் கதைப்பவர்களுக்கு இலவச உரைபெயர்ப்புச் சேவைகளை வழங்குவதன் மூலம்
  • தகுதியுள்ள முகமை வாடிக்கையாளர்களுக்கு இலவச உரைபெயர்ப்புச் சேவைகளை வழங்குவதன் மூலம்
  • உங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு பல தரப்பட்ட உரைபெயர்ப்புச் சேவைத் தேர்வுகளை வழங்குவதன் மூலம்
  • எங்களுடைய சேவைகளைப் பற்றி பல தரப்பட்ட தகவலளிக்கும் வெளியீடுகளையும் விளம்பரப் பொருட்களையும் வழங்குவதன் மூலம்.

பல்கலாச்சார அணுகல் மற்றும் நடுநிலைமைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பொறுப்பு பற்றிய வேறு பயனுள்ள வளங்களை Department of Social Services இணையத்தளத்திலிருந்து பெறலாம்.