தனியுரிமை

தனியுரிமை அறிவிப்பு

Translating and Interpreting Service (TIS National) என்பது Department of Immigration and Border Protection (திணைக்களம்) திணைக்களத்தின் ஒரு பகுதி ஆகும். TIS National மொழிச் சேவைகளை, தமது ஆங்கிலம் அல்லாத மொழியைப் பேசும் வாடிக்கையாளர்களுடன் தகவல் தொடர்புகொள்ள வேண்டியுள்ள ஆங்கிலம் அல்லாத மொழியைப் பேசும் மக்களுக்கும் முகவர் அமைப்புகள் மற்றும் வியாபார நிறுவனங்களுக்கும் வழங்குகிறது.

TIS National என்ன செய்கிறது?

TIS National பின்வரும் சேவைகளை வழங்குகிறது:

  • வருடம் முழுவதும் தினமும் 24 மணித்தியாலங்களும் உடனடித் தொலைபேசி உரைபெயர்ப்பாளர் சேவை
  • ஆங்கிலம் அல்லாத மொழியைக் கதைப்பவர்களுக்கு இலவச உரைபெயர்ப்புச் சேவைகள்
  • தகுதியுள்ள முகமை வாடிக்கையாளர்களுக்கு இலவச உரைபெயர்ப்புச் சேவைகள்
  • உங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு பல தரப்பட்ட உரைபெயர்ப்புச் சேவைத் தேர்வுகள்
  • எங்களுடைய சேவைகளைப் பற்றி பல தரப்பட்ட தகவலளிக்கும் வெளியீடுகளையும் விளம்பரப் பொருட்கள்.

தனியுரிமைத் தேவைகள்

TIS National ஆனது மேற்குறிப்பிட்ட சேவைகளை வழங்கும் பொருட்டு, மட்டுப்படுத்தப்பட்ட தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கிறது. நாங்கள் தனிநபர்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கும் போது, குறிப்பிட்ட சில விடயங்களைப் பற்றி அவர்களுக்கு திணைக்களம் தெரிவிக்க வேண்டுமென Privacy Act 1988 (தனியுரிமைச் சட்டம்) எதிர்பார்க்கிறது. இந்த அறிவிப்பு, அவுஸ்திரேலிய தனியுரிமைக் கோட்பாடு 5 இற்கு அமைய வழங்கப்படுகிறது.

TIS தேசிய தனியுரிமை அறிவிப்பு - அவுஸ்திரேலிய தனியுரிமைக் கோட்பாடு 5

உங்களுடைய தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பது யார்?

உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை TIS National சேகரிக்கிறது.

உங்களுடைய தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்தல்

உரைபெயர்ப்புச் சேவையை ஏற்பாடு செய்வதன் பொருட்டு நீங்கள் TIS National இடம் வழங்கும் மட்டுப்படுத்தப்பட்ட தகவல்களை மட்டுமே TIS National சேகரிக்கும். முறைப்பாடுகளைப் பற்றிய விசாரணைகளை நடத்துவதில், TIS National சேவைகளைப் பற்றிய பின்னூட்டப் படிவத்தில் வழங்கப்படும் தகவல்கள் எங்களுக்கு உதவிசெய்யும்.

தொலைபேசி உரையாடலின் உள்ளடக்கத்தை TIS National சேகரிக்காது என்பதைக் கவனத்தில் கொள்க. ஆதலால், வேறு வியாபாரங்கள்/நிறுவனங்களின் தனியுரிமை நடைமுறைகளுக்கு TIS National பொறுப்பாளி இல்லை; அவர்களுடைய தனியுரிமைக் கொள்கையை நீங்கள் வாசிக்க வேண்டுமென உங்களை ஊக்கப்படுத்துகிறோம்.

உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை TIS National எதற்காகச் சேகரிக்கிறது?

நியாயமாக அவசியமாகவும், ஒரு உரைபெயர்ப்புச் சேவையை ஏற்பாடு செய்வதுடனும் எங்களுடைய உரைபெயர்ப்பாளர்களுக்குரிய கட்டணங்களைச் செலுத்துவதுடனும் நேரடியாக தொடர்புள்ளதாகவும் இருக்கும் பட்சத்தில், தனிப்பட்ட தகவல்களை TIS National சேகரிக்கிறது. எங்களுடைய தகவல்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரத்தை முன்னேற்ற எங்களுக்கு உதவும் பின்னூட்டத்தையும் கூட நாங்கள் சேகரிப்போம்.

உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை TIS National யாருக்கு வெளிப்படுத்தும்?

பொதுவாக TIS National சேகரிக்கின்ற தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துவது என்பது உங்களுடைய சம்மதம் இல்லாமல் நடக்காது.

முறைப்பாட்டைக் கையாளும் போது, முதன்மையான நோக்கத்துடன் நேரடியாகத் தொடர்பாகவுள்ள இடத்தில், முறைப்பாட்டுக்கு உள்ளாகும் நபர் உட்பட, திணைக்களத்திற்குள் உள்ளவர்களுக்கும் மூன்றாம் தரப்பினர்களுக்கும் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை நாங்கள் வெளிப்படுத்தக் கூடும்.

பின்வரும் சந்தர்ப்பங்களின் கீழ் இரண்டாம்நிலை நோக்கத்திற்காக தனிப்பட்ட தகவலை TIS National வெளிப்படுத்தக் கூடும் அல்லது பயன்படுத்தக் கூடும்:

  1.  தகவல் முக்கியமானதாக இருந்தால் - முதன்மை நோக்கத்துடன் நேரடியாகத் தொடர்பானது என்றால்; அல்லது

  2.  தகவல் முக்கியமானதாக இல்லாவிட்டால் - முதன்மை நோக்கத்துடன் தொடர்பானது என்றால்.

இரண்டாம்நிலை நோக்கத்திற்கு உதாரணங்கள் ஆவன, மோசடியான செயற்பாடுகள், பதிவுசெய்யப்படாத இடப்பெயர்வு முகவர்களின் செயற்பாடுகள் முதலியவை.

உங்களுடைய தனிப்பட்ட தகவலுக்கான அணுகல் மற்றும் அதன் திருத்தம்

திணைக்களத்தின் தனியுரிமைக் கொள்கையில், திணைக்களத்தால் வைத்திருக்கப்படும் உங்களுடைய தனிப்பட்ட தகவலை எப்படி நீங்கள் அணுகலாம் மற்றும் திருத்தத்தைக் கேட்கலாம் என்பது குறித்த தகவல்கள் உள்ளன.

தனியுரிமை முறைப்பாடுகள்

திணைக்களத்தின் தனியுரிமைக் கொள்கையில், அவுஸ்திரேலிய தனியுரிமைக் கொள்கைகளின் மீறலைப் பற்றி எப்படி புகாரளிக்கலாம் மற்றும் திணக்களம் முறைப்பாடுகளை எப்படிக் கையாளும் முதலியவை குறித்த தகவல்கள் உள்ளன.

மேலும் தகவல்

மேலும் தகவலை திணைக்களத்தின் ஒன்லைன் DIBP தனியுரிமைப் பக்கத்தில் காணலாம்.

இந்தத் தனியுரிமை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கொள்கைகளுக்கு அமைவாக நாங்கள் நடக்கவில்லை என்று எந்த நேரத்தில் நீங்கள் எண்ணினாலும், எங்களை DIBP ஒன்லைன் பின்னூட்டப் படிவத்தின் ஊடாகத் தொடர்புகொள்ளுங்கள்.