எங்களைத் தொடர்பு கொள்ள
உடனடித் தொலைபேசி உரைபெயர்ப்பு
TIS Nationalன் உடனடித் தொலைபேசி உரைபெயர்ப்பு சேவை ஒரு நாளுக்கு 24 மணித்தியாலமும் வருடத்தில் எல்லா நாளும் செய்யப்படுகிறது.
தொலைபேசி: 131 450(அவுஸ்திரேலியாவிற்குள் மட்டும்)
இந்தச் சேவை அவுஸ்திரேலியாவில் உள்ள எந்த ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்திற்கு கிடைக்கும், ஆங்கிலம் அல்லாத பேசுபவர்கள் தொலைபேசி மூலம் சுதந்திரமாக சேவைகள் மற்றும் தகவல்களை அணுக செயல்படுத்தப்படுகிறது.
உடனடித் தொலைபேசி உரைபெயர்ப்பாளரை எவ்வாறு அணுகுவது
- 131 450 மூலம் TIS National ஐத் தொடர்புகொள்ளலாம்
- நீங்கள் ஒரு TIS National ஒப்பரேற்றருடன் இணைக்கப்படும் போது உங்களுக்கு தேவையான மொழியைச் சொல்லவும் .
- ஒப்பரேற்றர் உங்களுக்கான இருக்கும் உரைபெயர்ப்பாளரை கண்டெடுக்கும் வரை இணைப்பில் காத்திருக்கவும்.
-
ஒப்பரேற்றர் நீங்கள் கோரிய மொழியில் ஒரு மொழிபெயர்ப்பாளரை உங்களுடன்
இணைப்பார்.நீங்கள் கீழுள்ளவற்றை சமர்ப்பிக்க வேண்டும்:
- உங்களுடைய பெயர்
- நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நிறுவனத்தின் பெயர்.
- நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நிறுவனத்தின் தொலைபேசி இலக்கம்
- ஒப்பரேற்றர் உங்களை மற்றும் உரைபெயர்ப்பாளரை நிறுவனத்தின் மூலம் இணைக்கும் வரை இணைப்பில் காத்திருக்கவும்.
Share this page
Facebook Twitter