இருக்கக்கூடிய சேவைகள்

இந்த இணையதளம் ஆங்கிலப்புலமை குறைவான அல்லது இல்லாதோருக்கு TIS National-ன் சேவைகள் குறித்த தகவல்களை வழங்குகிறது.

இருக்கக்கூடிய சேவைகள்

இருக்கக்கூடிய சேவைகள்

TIS National என்பது ஆங்கிலப்புலமை குறைவாயுள்ள அல்லது இல்லாதோருக்காகவும் ஆங்கிலம் பேசாத வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ள வேண்டியிருக்கும் முகமைகள் மற்றும் வணிகங்களுக்குமான ஓர் உரைபெயர்ப்புச் சேவை. எங்களது சேவைகள் ஆங்கிலம் பேசாதோர் சுயமாக சேவைகளையும் தகவல்களையும் அவுஸ்திரேலியாவில் அணுகச் செய்கிறது.

TIS National உரைபெயர்ப்பாளர்களுக்கு தொலைபேசி, காணொளிக் கலந்துரையாடல் தளம் போன்றவை வாயிலாக அல்லது நேரடியாக ஒரு நேர ஒதுக்கீட்டில் கலந்துகொள்ளும் அணுகலைத் தருகிறது.

ஒரு வீட்டிலிருந்து அல்லது கைபேசியிலிருந்து TIS National-த் தொலைபேசியில் தொடர்புகொள்ள எவ்வளவு செலவாகும்

அவுஸ்திரேலியா முழுவதும் உள்நாட்டு அழைப்புக்கான செலவினை அறிய 131 450 என்ற எண்ணில் நீங்கள் TIS National-த் தொடர்புகொள்ளலாம். கைபேசிகளிலிருந்து அழைப்பதற்கான கட்டணங்கள் அல்லது அவுஸ்திரேலியாவுக்கு வெளியிலிருந்து அழைப்பது பயன்படுத்தப்படும் சேவை வழங்குநரைப் பொறுத்து கட்டணம் அதிகமாக இருக்கலாம்.

ஆங்கிலம் பேசாதோருக்கு பெரும்பாலான TIS National உரைபெயர்ப்புச் சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. பொதுவாக, நீங்கள் தொடர்புகொள்ளும் நிறுவனம் சேவைக்கான கட்டணங்களை ஏற்றுக்கொள்ளும்.

உடனடி தொலைபேசி உரைபெயர்ப்பு

TIS National-ன் உடனடி தொலைபேசி உரைபெயர்ப்புச் சேவையை 131 450 என்ற எண்ணில் அழைத்துப் பெறலாம். இது ஆண்டு முழுவதும் தினம் 24 மணிநேரமும் உண்டு.

இந்தச் சேவையை அவுஸ்திரேலியாவிலுள்ள எந்தவொரு தனிநபரும் அல்லது நிறுவனமும் பெறலாம்.

ஓர் உடனடி தொலைபேசி உரைபெயர்ப்பாளரை அணுகுவது எப்படி

TIS National- 131 450 என்ற எண்ணில் அழையுங்கள்.

ஒரு தானியங்கித் தூண்டல் உங்களுக்குத் தேவையான மொழி எதுவெனக் கேட்கும். தயவுசெய்து உங்களுக்குத் தேவையான மொழியைக் குறிப்பிடுங்கள்.

ஓர் ஆங்கிலம் பேசும் TIS National ஆபரேட்டரிடம் இணைப்பைப் பெற்றதும், உங்களுக்குத் தேவையான மொழியை உறுதிப்படுத்தும்படி கேட்கப்படும்.

உங்களுக்காக இருக்கக்கூடிய உரைபெயர்ப்பாளரை ஆபரேட்டர் கண்டறியும்வரை இணைப்பில் காத்திருங்கள். நீங்கள் கோரிய மொழியில் உரைபெயர்ப்பாளர்கள் யாரும் இல்லாவிட்டால், ஆபரேட்டர் உங்களை திரும்ப அழைக்கும்படி கேட்டுக்கொள்வார் அல்லது நீங்கள் வேறொரு மொழியில் உரைபெயர்ப்பாளரைக் கோர வாய்ப்பளிக்கப்படும்.

உரைபெயர்ப்பாளர் TIS National ஆபரேட்டரிடம் நீங்கள் யாரைத் தொடர்புகொள்ள வேண்டியுள்ளது என்று கூறுவார். ஆபரேட்டர் அந்த எண்ணை அழைத்து கோரிய நிறுவனத்துடன் உங்களையும் உரைபெயர்ப்பாளரையும் இணைப்பார்.

நீங்கள் எங்களுக்குத் தரவேண்டிய தகவல்கள்

ஆபரேட்டர் நீங்கள் கேட்டுக்கொண்ட மொழியில் ஓர் உரைபெபர்ப்பாளருடன் உங்களை இணைப்பார். உங்களிடம் கீழக்கண்டவற்றை வழங்கும்படி கேட்கப்படும்:

  • உங்கள் பெயர்
  • நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய நிறுவனத்தின் பெயர்
  • நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய நிறுவனத்தின் தொலைபேசி எண்.
  • முகமை கோரிய ஏதேனும் தேவையான தகவல்களை TIS National மூலம் பதிவுசெய்ய வேண்டுமா என உங்களிடம் கேட்கப்படலாம் (உதாரணமாக, ஓர் அடையாள எண் அல்லது உரிமைகோரல் எண்).

நீங்கள் தொடர்புகொள்ளும் நிறுவனம் அவர்களது வழக்கமான வேலை நேரத்தின்போது மட்டுமே தொடர்புகொள்ள முடிவதாக இருக்கலாம். வேலை நேரங்கள் நிறுவனங்களுக்கிடையே மாறுபடும்.

பதிவுசெய்த உரைபெயர்ப்புச் சேவைகள்

ஆங்கிலம் பேசாத வாடிக்கையாளருடன் பதிவுசெய்த முகமைகளை இணைப்பதற்கு மூன்றுவகையான பதிவுசெய்த சேவைகள் உள்ளன.

சேவைகளில் அடங்கியவை:

  • ஒரு தொலைபேசி உரைபெயர்ப்பாளரை நேர ஒதுக்கீட்டுக்கு முன்னர் முன்பதிவுசெய்வதற்கு, முன்பதிவு செய்த தொலைபேசி உரைபெயர்ப்புச் சேவை முகமை வாடிக்கையாளர்களுக்கு உள்ளது.
  • நேர்வருகை (நேருக்கு நேர்) உரைபெயர்ப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கலந்துகொள்வதற்கான சந்திப்பை முன்கூட்டியே பதிவு செய்யலாம். அவுஸ்திரேலியாவுக்குள் உள்ள எந்த இடத்திற்கும் நேர்வருகை உரைபெயர்ப்பாளர்களை ஏற்பாடு செய்யமுடியும் (உரைபெயர்ப்பாளர் கிடைப்பதைப் பொறுத்தது).
  • தொலைவழி காணொளி உரைபெயர்ப்பானது நேர்வருகையாகவோ அல்லது தொலைபேசி மூலமோ அல்லாது ஓர் உரைபெயர்ப்பாளருடன் தாங்கள் விரும்பும் காணொளி கலந்துரையாடல் தளம் மூலம் முகமைகள் இணைய அனுமதிக்கிறது.

வழக்கமாக தங்களது ஆங்கிலம் பேசாத வாடிக்கையாளருடன் தொடர்புகொள்வதற்காக, பதிவுசெய்த நிறுவனம் அல்லது முகமைகள் சேவைகளுக்கான முன்பதிவைச் செய்கின்றன.

ஒரு நிறுவனம் உங்களுக்காக ஓர் உரைபெயர்ப்பாளரைப் பதிவுசெய்ய ஏற்பாடு செய்திருந்து அதை நீங்கள் இரத்துசெய்ய வேண்டியிருந்தால், அதைக் கூடிய விரைவில் நிறுவனத்திடம் தெரியப்படுத்துவது முக்கியம்.