உடனடித் தொலைபேசி உரைபெயர்த்தல்

TIS National-இன் உடனடித் தொலைபேசி உரைபெயர்ப்பாளர் சேவையானது 131 450 என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் வருடம் முழுவதும் தினமும் 24 மணித்தியாலங்களும் கிடைக்கிறது.

இந்தச் சேவை அவுஸ்திரேலியாவிலுள்ள எந்தவொரு தனிநபருக்கும் அல்லது நிறுவனத்திற்கும் கிடைக்கிறது, எனவே ஆங்கிலம் அல்லாத மொழியைப் பேசுபவர்கள் தொலைபேசி ஊடாக தன்னிச்சையாகவே சேவைகளையும் தகவலையும் அணுக உதவுகிறது.

உடனடித் தொலைபேசி உரைபெயர்ப்பாளரை எப்படி அணுகுவது

 1. 131 450 என்ற இலக்கத்தில் TIS National ஐ அழையுங்கள்.
 2. TIS National ஒப்பரேட்டருடன் உங்கள் அழைப்பு இணைக்கப்பட்டதும் உங்களுக்குத் தேவையான மொழியைக் கூறுங்கள்.
 3. உங்களுக்குக் கிடைக்கின்ற உரைபெயர்ப்பாளரை ஒப்பரேட்டர் கண்டுபிடிக்கையில், இணைப்பிலேயே இருங்கள்.
 4. நீங்கள் கேட்டுக்கொண்ட மொழியிலுள்ள உரைபெயர்ப்பாளருடன் உங்களை ஒப்பரேட்டர் இணைத்துவிடுவார். இவற்றை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படும்:
  1. உங்கள் பெயர்
  2. நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய நிறுவனத்தின் பெயர்
  3. நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய நிறுவனத்தின் தொலைபேசி எண்
 5. நிறுவனத்தின் ஊடாக ஒப்பரேட்டர் உங்களையும் உரைபெயர்ப்பாளரையும் இணைக்கையில் இணைப்பிலேயே இருங்கள்.

  நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய நிறுவனம் ஆனது TIS National-இடமிருந்து அழைப்புகளை ஏற்றுக்கொள்ளும் என்பதை TIS National-ஆல் உத்தரவாதமளிக்க முடியாது. TIS National இன் பெரும்பாலான சேவைகள் ஆங்கிலம் அல்லாத மொழியைப் பேசுபவர்களுக்கு இலவசமாகவே வழங்கப்படும் அதேவேளை, நீங்கள் தொடர்புகொள்ளுகின்ற நிறுவனம் அந்தச் சேவைக்கான கட்டணத்தை ஏற்றுக்கொள்ளும். நீங்கள் தொடர்புகொள்ளுகின்ற நிறுவனம் அந்தச் சேவைக்கான கட்டணத்தை ஏற்றுக்கொள்ளாது என்றால், நீங்கள் TIS National   உடன் ஒரு தனிப்பட்ட கணக்கைப் பதிவுசெய்து, அந்தச் சேவைக்காக நீங்களே பணத்தைச் செலுத்தலாம்.

  வேலைசெய்யும் நேரங்களும் கூட நிறுவனங்களுக்கு இடையில் வித்தியாசப்படுகின்றன. அவுஸ்திரேலியாவிலுள்ள பெரும்பாலான நிறுவனங்கள் திங்கட்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை, காலை 9.00 மணிக்கும் மாலை 5 மணிக்கும் இடையில் தரநிலையான வேலை நேரங்களில் இயங்குகின்றன. பல நிறுவனங்கள் பொது விடுமுறைகளில் கிடைக்காது.