அணுகல்தன்மை

TIS National இணையதளத்தின் அணுகல் தரநிலைகள் குறித்த தகவல்கள் இந்தப் பக்கத்தில் அடங்கியுள்ளன

அணுகல்தன்மை

இந்த இணையதளம் World Wide Web Consortium (W3C)-லிருந்து ஒரு தொழில்நுட்பத் தரநிலையான இணைய உள்ளடக்க அணுகல்தன்மை வழிகாட்டுதல்கள் (WCAG) 2.0 (WCAG 2.0) நிலை AA-ஐ நோக்கி முன்னேறுகிறது. WCAG 2.0 ஆனது இணைய உள்ளடக்கத்தை மேலும் அணுகக்கூடியதாகவும் அனைவருக்கும் பயன்படுத்த எளிதான வகையில் எவ்வாறு ஆக்குவது என்பதையும் விளக்குகிறது.

உள்விவகாரத்துறை முடிந்தவரை பரவலான பார்வையாளர்களுக்கு, தொழில்நுட்பம் அல்லது திறன் என்னவாக இருந்தாலும், அவர்கள் அணுகும்படி இணையதளங்களை வழங்க உறுதிகொண்டுள்ளது. தனது அணுகல் மற்றும் சமத்துவ யுக்தி வாயிலாக மேலும் நியாயமானதும் மேலும் அணுகக்கூடியதுமான அரசுச் சேவைகளையும் திட்டங்களையும் எட்டும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நோக்கத்தில் TIS National முக்கியப் பங்கு வகிக்கிறது.

எங்கள் இணையதளத்தில் ஆவணங்கள் பதிவிறக்கம்

இந்த இணையதளம் HTML வடிவில் வழங்கமுடியாத வரம்புக்குட்பட்ட எண்ணிக்கையிலான ஆவணங்களைக் கொண்டுள்ளது.

பயனர்கள் இணைய உள்ளடக்கத்தைப் பதிவிறக்கவும் பகிரவும் உதவுவதற்காக, சில ஆவணங்கள் எடுத்துச் செல்லத்தக்க ஆவண வடிவிலும் (PDF) மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் வேர்டு வடிவிலும் கிடைக்கின்றன. முடிந்த இடத்தில் மாற்று வடிவங்கள் கிடைப்பதை உறுதிசெய்யவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

பதிவிறக்கத்தக்க ஆவணங்களுக்கு, கோப்பு வகை மற்றும் அளவைக் காட்டக்கூடிய ஓர் ஐகான் ஆவண இணைப்புக்கு அருகில் தோன்றும்.

எங்கள் தளத்தில் ஓர் ஆவணத்தை அணுகுவதில் உங்களுக்குச் சிரமம் இருந்தால், தயவுசெய்து எங்களைத் தொடர்புகொள்ளுங்கள். உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வடிவில் அதை உங்களுக்கு வழங்குவோம்.

எடுத்துச் செல்லத்தக்க ஆவண வடிவக் கோப்புகளை அணுகுதல்

எடுத்துச் செல்லத்தக்க ஆவண வடிவக் கோப்புகள் (PDF) உரை மற்றும் படங்களைக் கொண்டிருக்கும். ஒரு பிடிஎஃப் கோப்பு எப்போதும் .pdf என முடியும்.

தயவுசெய்து அவுஸ்திரேலிய அரசு தகவல் மேலாண்மை அலுவலகம் (AGIMO) பிடிஎஃப் ரீடர் பக்கத்தைப் பார்க்கவும்.

சில வாடிக்கையாளர்களுக்கு பிடிஎஃப் கோப்புகளை அணுகுவதில் சிரமம் இருப்பதைப் புரிந்துகொள்கிறோம். முடிந்த இடங்களில் HTML அல்லது மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் வேர்டு ஆவணங்கள் போன்ற மாற்று வடிவங்களைக் கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மைக்ரோசாஃப்ட் வேர்டு கோப்புகளை அணுகுதல்

மைக்ரோசாஃப்ட் வேர்டு ஆவணங்கள் பிடிஎஃப் கோப்புகளுக்கு மாற்றாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த மூலவளங்கள் அணுகக்கூடிய வழியில் வழங்கப்பட்டுள்ளன. அர்த்தத்தைக் கொண்டிருக்கும் நிறங்களோ அல்லது படங்களோ இதில் இருக்காது.

இந்த ஆவணங்கள் எப்போதும் .doc அல்லது .docx என முடியும். இவற்றைப் பெரும்பாலான மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் பதிப்புகளில் அணுகமுடியும்.

உங்களுக்குக் கூடுதல் உதவி தேவையா?

இந்தத் துறை அணுகல்தன்மை மற்றும் பயன்படுத்தும் விதம் ஆகியவற்றுக்கான ஏற்கப்பட்ட வழிகாட்டுதல்களையும் தரநிலைகளையும் கடைப்பிடிக்கக் கடுமையாக முயற்சிக்கிறது. இது எல்லா நேரத்திலும் சாத்தியமானதல்ல எனும் நிலையில், தேவையான அளவு அணுகல்தன்மை உள்ள நிலை வரையிலும் தளத்தின் அனைத்துப் பகுதிகளையும் கொண்டுவரக்கூடிய தீர்வுகளை நாங்கள் தொடர்ந்து நாடுகிறோம்.

நீங்கள் அணுகல்தன்மை அல்லது பயன்படும் விதத்தில் ஒரு பிரச்சினையைக் கண்டறிந்தால், தயவுசெய்து எங்களது பின்னூட்டப் படிவம் வாயிலாகப் பின்னூட்டம் வழங்கவும்.

எங்கள் தளத்தில் ஓர் ஆவணத்தை அணுகுவதில் உங்களுக்குச் சிரமம் இருந்தால் அல்லது கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களைத் தொடர்புகொள்ளுங்கள். உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வடிவில் அந்தத் தகவல்களை உங்களுக்கு வழங்குவோம்.