TIS National பயன்படுத்துவதில் உதவி

பல்வேறு TIS National சேவைகள் உள்ளன. குறைவான ஆங்கிலமொழிப் புலமையுள்ள யார் வேண்டுமானாலும் வணிகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைத்துக் கொள்வதற்கு உரைபெயர்ப்பாளருக்கான கோரிக்கையினைச் செய்யலாம்.

TIS National பயன்படுத்துவதில் உதவி

TIS National என்னை இணைக்கும் உரைபெயர்ப்பாளரை நான் அறிந்திருந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?

உங்களுக்கு ஒதுக்கப்பட்ட உரைபெயர்ப்பாளர் உங்களுக்குத் தெரிந்தவர் எனில், உரைபெயர்ப்பு அமர்வினைத் தொடர விரும்புகிறீர்களா என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். அதே உரைபெயர்ப்பாளருடன் நீங்கள் தொடர விரும்பாவிட்டால், TIS National ஆபரேட்டரிடம் அல்லது நிறுவனத்திடம் சொல்லி அழைப்பைத் துண்டியுங்கள்.

ஓர் ஆண் அல்லது பெண் உரைபெயர்ப்பாளரை நான் கோரலாமா?

ஆம். குறிப்பிட்ட பாலினத்தைச் சேர்ந்த உரைபெயர்ப்பாளர் உங்களுக்கு வேண்டுமெனில், TIS National ஆபரேட்டரிடம் அல்லது நிறுவனத்திடம் முடிந்தவரை விரைவாக நீங்கள் தொடர்புகொள்ள உள்ளீர்கள் என்று சொல்லுங்கள். TIS National நீங்கள் கோரிய பாலினத்தைச் சேர்ந்த உரைபெயர்ப்பாளரை வழங்க முயற்சிக்கும்.

TIS National வாயிலாக நான் யாரைத் தொடர்புகொள்ள முடியும்?

TIS National அவுஸ்திரேலியா எங்கிலும் பல்வகை முகமைகள் மற்றும் வணிகங்களுக்கு உரைபெயர்ப்புச் சேவைகளை வழங்குகிறது.

TIS National உடன் உள்நாட்டு விவகாரத்துறை உட்பட 90,000-க்கும் மேற்பட்ட முகமைக் கணக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

எங்கள் வாடிக்கையாளர்களில் சிலர்:

  • மாகாண மற்றும் மத்திய அரசுத் துறைகள்
  • உள்ளூர் மன்றங்கள்
  • மருத்துவ மற்றும் சுகாதார வல்லுநர்கள்
  • மருந்தகங்கள்
  • மின்சார நிறுவனங்கள்
  • தொலைதொடர்பு நிறுவனங்கள்
  • அவசரநிலைச் சேவைகள்
  • சட்டச் சேவைகள்
  • குடியிருப்பு மற்றும் சமூகச்சேவை வழங்குநர்கள்
  • நில அபிவிருத்தி முகமைகள்.

 

நிறுவனங்கள் ஓர் உரைபெயர்ப்பாளரை வழங்க வேண்டுமா?

அவுஸ்திரேலியாவின் பல்லினக் கலாச்சார அணுகல் மற்றும் சமத்துவக் கொள்கையின்படி, அவுஸ்திரேலிய அரசுத்துறைகளுக்கும் முகமைகளுக்கும் குறைவான ஆங்கிலப் புலமையுள்ளோரின் தேவைகளுக்குப் பதிலளிக்கும் கடப்பாடு உள்ளது.

சில தனியார் நிறுவனங்கள் TIS National வசமிருந்து வரும் அழைப்புகளை ஏற்காமல் இருக்கலாம். எனினும் நீங்கள் நிறுவனத்தை நேரடியாக அழைத்தால், அவர்கள் தொலைபேசி உரைபெயர்ப்பாளருடன் உங்களைத் திரும்ப அழைக்கக்கூடும்.

TIS National வாடிக்கையாளராக இல்லாத ஒரு நிறுவனத்தை நீங்கள் தொடர்புகொள்ள விரும்பினால், அந்த நிறுவனம் அந்தச் சேவைக்கான கட்டணத்தை ஏற்கத் தயாராக இல்லையெனில், நீங்கள் TIS National உடன் ஒரு தனிப்பட்ட கணக்கைத் தொடங்கி நீங்களாகவே சேவைக்கான கட்டணத்தைச் செலுத்தலாம். TIS National உடன் ஒரு தனிப்பட்ட கணக்கைப் பதிவுசெய்வது எப்படி என்பதைக் கண்டறியுங்கள்.

 

வீடு மற்றும் குடும்ப வன்முறைச் சூழ்நிலைகளுக்கு எத்தகைய உதவியை அணுகலாம்?

வீடு மற்றும் குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை மற்றும் கட்டாயத் திருமணம் மற்றும் பாதுகாப்பாக இருப்பதற்கான பெண்ணின் உரிமை தொடர்பான அவுஸ்திரேலியச் சட்டங்கள் குறித்த தகவல்களைக் கொண்ட குடும்பப் பாதுகாப்புத் தொகுப்பை அவுஸ்திரேலிய அரசு உருவாக்கியுள்ளதுஇந்தத் தொகுப்பில் நான்கு தகவல்தாள்களும் ஒரு கதைப் பலகையும் அடங்கியிருக்கும். இது 46 மொழிகளில் கிடைக்கிறதுஇந்தக் குடும்பப் பாதுகாப்புத் தொகுப்பானது சமூகசேவைத் துறை இணையதளத்தில் கிடைக்கிறது.

ஓர் உரைபெயர்ப்பாளரைப் பயன்படுத்தி TIS National-உம் கூட பல்வேறு குடும்பச் சேவைகளுடன் உங்களை இணைக்க முடியும்.