குறைவான ஆங்கிலமொழிப் புலமை உடையோருக்கான பிற சேவைகள்
இலவச மொழிபெயர்ப்புச் சேவை
ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாகக் குடியேறுபவர்களுக்கு இலவச மொழிபெயர்ப்புச் சேவை வழங்கப்படுகிறது. இது வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் சமூக ஈடுபாட்டில் பங்கேற்பை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசாங்க சேவைகள் மற்றும் திட்டங்களை அணுகுவதற்கு பெரும்பாலும் தனிப்பட்ட ஆவணங்கள் தேவைப்படுகின்றன. புதிய புலம்பெயர்ந்தவர்களுக்கு இலவச ஆவண மொழிபெயர்ப்புகளை வழங்குவது இந்தச் செயல்முறையை எளிதாக்குகிறது.
உள்நாட்டு விவகாரத் துறை சார்பாக TIS National இலவச மொழிபெயர்ப்புச் சேவையை வழங்குகிறது. ஜூலை 1, 2025 க்கு முன்பு, இலவச மொழிபெயர்ப்புச் சேவை தி மைக்ரேஷன் டிரான்ஸ்லேட்டர்களால் வழங்கப்பட்டது
கூடுதல் தகவல்கள்இலவச மொழிபெயர்ப்பு இணையதளத்தில்.
வயதுவந்த புலம்பெயர்ந்தவர் ஆங்கிலத் திட்டம்
வயதுவந்த புலம்பெயர்ந்தவர் ஆங்கிலத் திட்டம் (AMEP) இலவச ஆங்கிலமொழி டியூஷன் வழங்குகிறது. நீங்கள் புலம்பெயர்ந்தவராகவோ அல்லது மனிதநேய அடிப்படையிலோ நுழைந்தவர் என்றால் நீங்கள் AMEP-க்குத் தகுதியுடையவராக இருக்கலாம். ஆங்கிலம் கற்பது அவுஸ்திரேலியாவில் உங்கள் புதிய வாழ்வை அமைத்துக்கொள்ள உதவும்.
நேருக்குநேர் வகுப்புகளில் கலந்துகொள்வோரால், பள்ளி செல்லும் வயதுக் குழந்தைகளுக்கான இலவசக் குழந்தைப் பராமரிப்பினை அணுகமுடியும்.
70 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடியேறுவோருக்கு AMEP ஆங்கிலம் கற்றுத்தந்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் 50,000 முதல் 60,000 தகுதிவாய்ந்த புலம்பெயர்ந்தோருக்கும் மனிதநேய அடிப்படையில் புலம்பெயர்ந்தோருக்கும் உதவுகிறது. AMEP குறித்த கூடுதல் தகவல்களை உள்நாட்டு விவகாரத்துறை இணையதளத்தில் காணலாம்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான திறமைகள் (SEE) திட்டம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான திறமைகள் (SEE) திட்டமானது தகுதிவாய்ந்த வேலைதேடுவோருக்கு, தங்களது மொழி, வாசிப்பு, எழுதுதல், கணிதம் மற்றும் கணக்கிடும் திறமைகளை மேம்படுத்துவதன் மூலம், தாங்கள் விரும்பும் வேலையைப் பெறுவதற்கு அல்லது மேற்படிப்புக்குச் செல்வதற்குத் தேவையான திறமைகளைக் கற்றுக்கொள்ள உதவுகிறது.
SEE பயிற்சியானது உங்கள் திறமைகளுக்கும் இலட்சியங்களுக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டு அவுஸ்திரேலியா முழுவதும், பெருநகரங்கள் முதல் பிராந்தியப் பகுதிகள் வரை பின்தங்கிய சமூகங்களுக்கும் நெகிழ்வுத்தன்மையுடன் பகுதி நேரமாகவும் முழுநேரமாகவும் வழங்கப்படுகிறது.
SEE திட்டம் குறித்த காணொளிகள் மற்றும் உண்மையிலேயே மக்கள் தங்கள் இலக்குகளை அடைய இந்தத் திட்டம் எவ்வாறு உதவிவருகிறது என்ற வெற்றிக்கதைகள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை வேலைவாய்ப்பு மற்றும் பணியிடத் தொடர்புகள் துறையின் இணையதளத்தில் காணலாம்.