தொடர்புக்கு

TIS National-ன் உடனடி தொலைபேசி உரைபெயர்ப்புச் சேவைக்கான தொடர்பு விபரங்கள். 

உடனடித் தொலைபேசி உரைபெயர்ப்பு

TIS Nationalன் உடனடித் தொலைபேசி உரைபெயர்ப்பு சேவை ஒரு நாளுக்கு 24 மணித்தியாலமும் வருடத்தில் எல்லா நாளும் செய்யப்படுகிறது.

தொலைபேசி: 131 450 (அவுஸ்திரேலியாவிற்குள் மட்டும்)

இந்தச் சேவை அவுஸ்திரேலியாவில் உள்ள எந்த ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்திற்கு கிடைக்கும், ஆங்கிலம் அல்லாத மொழியில் பேசுபவர்கள்  தொலைபேசி மூலம் சுதந்திரமாக சேவைகள் மற்றும் தகவல்களை அணுக செயல்படுத்தப்படுகிறது.

உடனடித் தொலைபேசி உரைபெயர்ப்பாளரை எவ்வாறு அணுகுவது

 1. 131 450 மூலம் TIS National ஐத் தொடர்புகொள்ளலாம்
 2. நீங்கள் ஒரு TIS National ஆபரேட்டர் டன் இணைக்கப்படும் போது உங்களுக்கு தேவையான மொழியைச் சொல்லவும் .
 3. ஆபரேட்டர் உங்களுக்கான இருக்கும் உரைபெயர்ப்பாளரை கண்டெடுக்கும் வரை இணைப்பில் காத்திருக்கவும்.
 4. ஆபரேட்டர் நீங்கள் கோரிய மொழியில் ஒரு மொழிபெயர்ப்பாளரை உங்களுடன் இணைப்பார்.நீங்கள் கீழுள்ளவற்றை சமர்ப்பிக்க வேண்டும்:
  1. உங்களுடைய பெயர்
  2. நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நிறுவனத்தின் பெயர்.
  3. நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நிறுவனத்தின் தொலைபேசி இலக்கம்
 5. ஆபரேட்டர் உங்களை மற்றும் உரைபெயர்ப்பாளரை நிறுவனத்தின் மூலம் இணைக்கும் வரை இணைப்பில் காத்திருக்கவும்.