பல்லினக் கலாச்சார அணுகல் மற்றும் சமத்துவம்
அனைத்து அவுஸ்திரேலியர்களும் அவர்களது கலாச்சாரமும் மொழிப் பின்புலமும் எதுவாக இருப்பினும் அரசுக் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் சேவைகளைச் சம அளவில் அணுகுவதற்கு உரிமைக் கொண்டவர்கள்.
வலுப்படுத்தப்பட்ட பல்லினக் கலாச்சார அணுகல் மற்றும் சமத்துவக் கொள்கை வாயிலாக அவுஸ்திரேலிய அரசு இதற்கு உறுதிபூண்டுள்ளது. அனைத்து அவுஸ்திரேலிய அரசுத் திட்டங்கள் மற்றும் சேவைகள் பின்வருமாறு அமைவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது:
- நியாயம்
- சுலபமாகஅணுகல்
- பயன்படுத்துவதில் எளிமை
- அவுஸ்திரேலியாவின் பன்முகச் சமூகத்தின் கலாச்சார மற்றும் மொழிசார் தேவைகளுக்கு பதிலளிக்கக்கூடிய வகை
TIS National எவ்வாறு அவுஸ்திரேலியச் சமூகத்திற்கு பல்லினக் கலாச்சார அணுகல் மற்றும் சமத்துவத்தை அளிக்கிறது
TIS National அவுஸ்திரேலியச் சமூகத்திற்கு பின்வருவனவற்றின் வாயிலாக பல்லினக் கலாச்சார அணுகல் மற்றும் சமத்துவத்தை அளிக்கிறது
- உடனடி தொலைபேசி உரைபெயர்ப்புச் சேவையை ஆண்டின் ஒவ்வொரு நாளும் 24 மணிநேரமும் வழங்குவது
- ஆங்கிலம் பேசாதோருக்கு இலவச பெரும்பாலான நிலைகளில் உரைபெயர்ப்புச் சேவைகளை வழங்குவது
- தகுதிவாய்ந்த குழுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இலவசஉரைபெயர்ப்புச் சேவைகளுக்கான அணுகலை வழங்குவது
- உஙக்ள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பல்வகை உரைபெயர்ப்புச் சேவைத் தெரிவுகள் வழங்குவது
- எங்களது சேவைகள் குறித்த பல்வகை தகவல்களைக் கொண்ட வெளியீடுகள் மற்றும் ஊக்குவிப்பு உபகரணங்களை வழங்குதல்
- மொழிபெயர்க்கப்பட்ட பன்மொழித் தகவல்களையும் மூலவளங்களையும் வழங்குதல்\.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பல்லினக் கலாச்சார அணுகல் மற்றும் சமத்துவத்துக்கான உறுதிப்பாடு குறித்த பிற பயனுள்ள மூலவளங்கள் உள்விவகாரத்துறை இணையதளத்தில் கிடைக்கிறது.
அரசு முகமைகளுக்கான கடப்பாடுகள்
பல்லினக் கலாச்சார அணுகல் மற்றும் சமத்துவக் கொள்கையின்படி குறைவான ஆங்கிலப்புலமை கொண்டோருக்கு உரைபெயர்ப்புச் சேவைகளை வழங்குவதன் மூலம் அணுகக்கூடிய சேவைகளை வழங்கும் கடப்பாடு அரசுச் சேவைகளுக்கு உள்ளது. இதில் ஆங்கிலம் பேசாதோரால் செய்யப்படும் அனைத்து உரைபெயர்ப்புச் சேவைகளுக்குமான செலவுகளை ஏற்பதும் அடங்கும்.
கணக்கு பதிவுசெய்யும் நேரத்தில், உரைபெயர்ப்பாளர்களைப் பயன்படுத்தும் செலவுகளுக்காக அரசு முகமைகளுக்கு TIS National கட்டணம் விதிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் முகமையைத் தொடர்புகொள்வதற்கான அனைத்து முயற்சிகள், பதிலளிக்கப்படாத அழைப்புகள் மற்றும் குரல் அஞ்சலுக்குச் செல்பவை ஆகியவையும் அடங்கும்.