தனியுரிமை அறிவிப்பு

தனியுரிமைச் சட்டம் 1988 (Cth) (தனியுரிமைச் சட்டம்)-ன்படி, ஒரு தனிநபர் குறித்த தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கும்போது  உள்விவகாரத்துறை (துறை) அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியுள்ளது. அந்த விவகாரங்களுக்கான உங்களுக்கான அறிவிப்பு இது.

தனியுரிமை அறிவிப்பு

தனிநபர் ஒருவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டும் பொழுது குறிப்பிட்ட சில விடயங்களை அந்த நபருக்கு அறிவிக்கவேண்டுமென ‘உள்-நாட்டு விவகாரத் திணைக்கள’ (Department of Home Affairs) (‘திணைக்களம்’) த்தினை ‘தகவல் பாதுகாப்பு சட்டம் 1988 (Cth) (தகவல் பாதுகாப்பு சட்டம்) Privacy Act 1988 (Cth) (Privacy Act) வேண்டுகிறது. அந்த விடயங்களைப் பற்றிய உங்களுக்கான அறிவிப்பாகும் இது. 

'மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவை (TIS நேஷனல்)' (Translating and Interpreting Service (TIS National))-இன் பணி என்ன?

TIS National என்பது ‘திணைக்கள’த்தினால் அளிக்கப்படும் ஒரு மொழிபெயர்த்துரைப்பு சேவை. ஆங்கிலம் பேசாதவர்களுக்கும், ஆங்கிலம் பேசாத சேவை-பெறுநர்களுடன் தொடர்பாடல் கொள்வதற்கான தேவையுள்ள முகமைகள் மற்றும் வர்த்தகங்களுக்கும் மொழி சம்பந்தப்பட்ட சேவைகளை TIS National வழங்குகிறது. 

TIS National வழங்கும் சேவைகளாவன: 

  • தொலைபேசி வழியிலான உடனடி மொழிபெயர்த்துரைப்பு
  • ‘தானியங்கி தொலைபேசி மொழிபெயர்த்துரைப்பு சேவை’ (Automated Telephone Interpreting Service (ATIS))
  • முன்பதிவு செய்யப்பட்ட தொலைபேசி-வழி மொழிபெயர்த்துரைப்பு
  • ‘தல-வருகை’ (On-site) மொழிபெயர்த்துரைப்பு
  • ‘காணொலி-வழித் தொலைதூர மொழிபெயர்த்துரைப்பு’ 
  • எமது சேவைகளைப் பற்றிய பல விதத் தகவல் வெளியீடுகள் மற்றும் முன்னேற்ற-ஆக்க-முயற்சி ஏடுகள்

‘ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள்’ (‘personal information’) என்று சொல்லப்படுபவை யாவை?

அவை சரியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நியாயமான முறையில் அடையாளம் காணப்படக்கூடிய தனிநபர் ஒருவரைப் பற்றிய  தகவல்கள் அல்லது கருத்து, ‘ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள்’ என்று சொல்லப்படும். 

தனி நபர் ஒருவரது இன-மூலம், பாலியல் நாட்டம் அல்லது செயல்பாடுகள், குற்றப் பதிவுகள், தொழில்-வல்லுனர், அல்லது தொழிலாளர் அமைப்புகள், தொழிற் சங்கங்கள் ஆகியவற்றிலுள்ள அங்கத்துவம், மத நம்பிக்கைள் அல்லது மத சேர்க்கைகள், சித்தாந்த நம்பிக்கைகள், அரசியல் கருத்துகள், அரசியல் அமைப்புகளில் உள்ள அங்கத்துவம், உடல்நலம், மரபு-சார் மற்றும் ‘சரீர-அளவீடுகள்’ என்று ‘தகவல் பாதுகாப்பு சட்ட’(Privacy Act)த்தினால் அர்த்தம் சொல்லப்படும் ‘உணர்வார்ந்த தகவல்க’(‘sensitive information’)ளும் தனி நபர் ஒருவரைப் பற்றிய தகவல்களில் உள்ளடங்கும். 

உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை TIS National எப்போது மற்றும் எவ்வாறு சேகரிக்கும்?

ஆங்கிலம் பேசாத தமது சேவை-பெறுநர்களுடன் தொர்பாடல் கொள்ள விரும்பும் மொழிபெயர்த்துரைப்பாளர்கள், ஆங்கிலம்-பேசா நபர்கள் மற்றும் முகமைகளைச் சேர்ந்த சேவை-பெறுவோர் உள்ளடங்க, எமது சேவைகளில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்துத் தரப்பினரைப் பற்றியுமான தனிப்பட்ட தகவல்களை TIS National திரட்டும். மொழிபெயர்த்துரைப்பாளர்களது ‘அடுத்த-உறவு’(next of kin)/அவசரகாலத் தொடர்பு விபரங்கள் ஆகியவற்றையும் நாங்கள் திரட்டுவோம். 

பொதுவாக, TIS National உங்களிடமிருந்து தகவல்களை நேரடியாகத் திரட்டும். மின்னஞ்சல் உள்ளடங்க, தொலைபேசி அல்லது இணையம் மூலமாக நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை எமக்குக் கொடுக்கும் பொழுது இந்தத் தகவல்களை நாங்கள் திரட்டுவோம். உதாரணத்திற்கு, விசாரிப்பு ஒன்றை மேற்கொள்ள, பின்னூட்டம் அளிக்க, மின்னஞ்சல் ஒன்றை அனுப்ப, முன்பதிவு ஒன்றைச் செய்ய அல்லது எமது மொழிபெயர்த்துரைப்பு சேவைகளைப் பயன்படுத்த தொலைபேசி மூலமாகவோ, இணையம் மூலமாகவோ நீங்கள் எம்முடன் தொடர்புகொள்ளக்கூடும். உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை எமக்குக் கொடுக்க நீங்கள் விரும்பாவிட்டால், உங்களுக்கு சேவைகளை அளிப்பதற்கான எமது திறனை அது பாதிக்கக்கூடும். 

மொழிபெயர்த்துரைப்பு சேவைகளை அளிக்கும் நோக்கத்திற்காக மற்ற அமைப்புகளிடமிருந்தும் (அரச முகமைகள் மற்றும் சேவை வழங்கும் ஒப்பந்ததாரர்கள் உள்ளடங்க) நாங்கள் ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களைத் திரட்டக்கூடும். மொழிபெயர்த்துரைப்பாளர்கள் சம்பந்தப்பட்டிருக்கும் அவசரகால சூழல் நிர்வாகத்தில் பயன்படுத்துவதற்காக மொழிபெயர்த்துரைப்பாளர்களிடமிருந்து நேரடியாக ‘அடுத்த-உறவு’ (next of kin) குறித்த விபரங்களை நாங்கள் திரட்டுவோம். 

தர உறுதிப்பாடு மற்றும் நாணய நோக்கங்களுக்காக மொழிபெயர்த்துரைப்பு அழைப்புகளை நாங்கள் ஒலிப்பதிவு செய்யவும் கூடும். தமது ஆங்கிலம்-பேசா சேவை பெறுநர்களுடன் தொடர்பாடல் கொள்வதற்காக TIS National -இன் மொழிபெயர்த்துரைப்பு சேவைகளைப் பயன்படுத்தும் முகமைகளும் மொழிபெயர்த்துரைப்பு அழைப்புகளை ஒலிப்பதிவு செய்யக்கூடும். அவ்வாறான எவ்வொரு ஒலிப்பதிவுகளிலும் இந்த சேவையுடன் சம்பந்தப்பட்ட மொழிபெயர்த்துரைப்பாளர்கள் மற்றும் ஏனையோரைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் திரட்டப்படும். 

உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை TIS National திரட்டுவதும், பயன்படுத்துவதும் ஏன்?

மொழிபெயர்த்துரைப்பு சேவைகளை வழங்குதல் மற்றும் சம்பந்தப்பட்ட கட்டணத் தொகைகளைச் செயல்முறைப்படுத்துதல் ஆகியவற்றிற்காக நியாயமான முறையில் அவசியப்படும் பொழுதும், அவற்றுடன் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கும் பொழுதும் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை TIS National திரட்டும். எமது மொழிபெயர்த்துரைப்பு சேவைகளின் தர உறுதிப்பாடு, பாதுகாப்பு, மற்றும் நாணயம் ஆகியன சம்பந்தப்பட்ட நோக்கங்களை முன்னிட்டும் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்தக் கூடும். 

சில தகவல்கள் அல்லது அனைத்துத் தகவல்களும் ‘திணைக்கள’த்தினால் திரட்டப்படாவிட்டால், மொழிபெயர்த்துரைப்பு சேவைகளை உங்களுக்கு அளிக்க, அல்லது சம்பந்தப்பட்ட கட்டணங்களைச் செயல்முறைப்படுத்த எம்மால் இயலாமல் போகக்கூடும். 

எந்த வகையான தனிப்பட்ட தகவல்களை TIS National திரட்டுகிறது?

எமது மொழிபெயர்த்துரைப்பு சேவைகளை நீங்கள் பயன்படுத்தும் பொழுது உங்களுடைய அடையாளத்தைப் பற்றிய விபரங்களை நாங்கள் கேட்கக்கூடும். உங்களுடைய பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம், பிறந்த திகதி, கணக்கு இலக்கம், பாலிசி இலக்கம் அல்லது மற்ற அடையாள இலக்கம் ஆகியன இதில் உள்ளடங்கலாம். 

உணர்வார்ந்த தகவல்களின் திரட்டலைப் பற்றிய மிகவும் கட்டுப்பாடான நிபந்தனைகளை ‘தகவல் பாதுகாப்பு சட்டம்’ (Privacy Act) கொண்டுள்ளது. உடல் நலம் அல்லது ‘பயோமெட்ரிக்’ தகவல்கள் ஆகியவற்றை இது உள்ளடக்கும். உங்களுடைய தடுப்பூசியேற்றத் தகு-நிலையைப் பற்றிய தகவல் உடல் நலத்தினைப் பற்றிய தகவலாகும், மற்றும் உங்களுடைய குரலின் ஒலிப்பதிவு ‘பயோமெட்ரிக்’ தகவலாகும். 

வழங்கப்படும் மொழிபெயர்த்துரைப்பு சேவைகளை TIS National  ஒலிப்பதிவு செய்யக்கூடும். மொழிபெயர்த்துரைப்பு அழைப்பில் பங்குபற்றும் அனைத்துத் தரப்பினரைப் பற்றிய தகவல்களை இந்த ஒலிப்பதிவுகள் அகப்படுத்தக்கூடும். அழைப்புகளை நாங்கள் ஒலிப்பதிவு செய்வோமேயானால், தர உறுதிப்பாட்டு நோக்கங்களுக்காகவும், நாங்கள் வழங்கும் மொழிபெயர்த்துரைப்பு சேவைகளின் நாணயத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் இந்தத் தகவல்கள் திரட்டப்படும். 

நீங்கள் TIS National-இற்கு மொழிபெயர்த்துரைப்பு சேவைகளை அளிக்கும் ஒரு மொழிபெயர்த்துரைப்பாளர், அல்லது சேவையைப் பெறும் ஒரு முகமை என்றால், ‘குரல்-கடவுச்சொல்’ (vocal password) அல்லது ‘குரல்-பதிப்பு’ (voiceprint’) ஒன்றை உருவாக்குவதற்காக உங்களுடைய குரலின் பதிவு ஒன்றையும் நாங்கள் திரட்டக்கூடும். எமது மொழிபெயர்த்துரைப்பாளர்களிடமிருந்து தடுப்பூசியேற்றத் தகு-நிலையைப் பற்றிய தகவல்களையும் நாங்கள் திரட்டக்கூடும். TIS Online-இல் உள்ள மொழிபெயர்த்துரைப்பாளர் தளத்தில் கிடைக்கும் எமது ‘தகவல் பாதுகாப்புக் கொள்கை – கோவிட்-19 தடுப்பூசியேற்றத் தகுநிலைத் தகவல் திரட்டல்’ (Privacy notice – collection of COVID-19 vaccination status information) எனும் அறிவிப்பில் ‘கோவிட்’19’ தடுப்பூசியேற்றத்தைப் பற்றிய தகவல்களை TIS National திரட்டுவதையும், பயன்படுத்துவதையும் பற்றிய தகவல்களை மொழிபெயர்த்துரைப்பாளர்கள் காணலாம். 

உங்களுடைய சம்மதத்துடன் மட்டுமே உங்களிடமிருந்து உணர்வார்ந்த தகவல்களை நாங்கள் திரட்டுவோம். உங்களைப் பற்றிய உணர்வார்ந்த தகவல்களின் திரட்டல் எமது சேவை வழங்கலுக்கு அவசியப்படும் பொழுது, அல்லது எமது சேவை வழங்கலுடன் அவை நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கும் பொழுது உங்களுடைய சம்மதத்தினை அளிக்குமாறு நாங்கள் உங்களைக் கேட்போம். உங்களுடைய சம்மதத்தினை அளிக்காமல் இருப்பதற்கான தெரிவினை நீங்கள் மேற்கொள்ளலாம், ஆனால் எமது சேவைகளை உங்களுக்கு அளிப்பதற்கான, அல்லது நீங்கள் ஒரு TIS National மொழிபெயர்த்துரைப்பாளர் என்றால், குறிப்பிட்ட சில வகைப்பட்ட வேலைகளை உங்களுக்குக் கொடுப்பதற்கான எமது திறன் மீது இது தாக்கம் ஏற்படுத்தக்கூடும்.   

உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை TIS National வெளிப்படுத்தக்கூடும்

மொழிபெயர்த்துரைப்பு சேவைகளை இலகுவாக்குதல், எமது சேவைகளின் தரம், பாதுகாப்பு மற்றும் நாணயத்தினை உறுதிப்படுத்துதல், மற்றும் அந்த சேவகளுக்கான கட்டணங்களை வேண்டுதல் ஆகிய நோக்கங்களுக்காக ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை TIS National வெளிப்படுத்தும். எமது சேவைகளைப் பயன்படுத்தும் மற்ற முகமைகளின் சார்பாக மொழிபெயர்த்துரைப்பு சேவைகளுக்காகப் பணம் செலுத்தும் அரச, சமூக மற்றும் தனியார் துறை அமைப்புகள் மற்றும் நிதியுதவி அமைப்புகள் ஆகியன உள்ளடங்க, மொழிபெயர்த்துரைப்பாளர்கள் மற்றும் சேவை பெறும் முகமைகளுக்கு நாங்கள் தகவல்களை வெளிப்படுத்தக்கூடும்.

வெளிப்படுத்தப்படும் ஒருவரைப் பற்றிய தகவல்களில் உங்களுடைய பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், பிறப்புத் திகதி, புகைப்படம், கணக்கு இலக்கம், பாலிசி இலக்கம், ஏனைய அடையாள இலக்கம், அல்லது வேலையின் பெயர் மற்றும் சேவை பெறும் முகமைகளது தொடர்பு விபரங்கள் ஆகியன உள்ளடங்கலாம்.

ஒரு மாநிலம் அல்லது எல்லைப் பிரதேசத்தின் சட்டம் ஒன்றை உள்ளடக்கும் ஆஸ்திரேலிய சட்டம் ஒன்றினால் அதிகாரம் அளிக்கப்படும், அல்லது வேண்டப்படும் தருணங்களிலும் ஒருவரைப் பற்றிய தகவல்களை TIS National வெளிப்படுத்தக்கூடும். முறைப்பாடு ஒன்றிற்கு மறுமொழி அளிப்பது அல்லது எமது சேவைகளை மேம்படுத்துவதற்காகக் கருத்துப் பின்னூட்டல்களை அளிப்பது ஆகிய நோக்கங்களுக்காகவும் ‘திணைக்களம்’, மற்ற அரச முகமைகள் அல்லது மூன்றாம் தரப்பினருக்கும் (முறைப்பாடு யாரைப் பற்றியதோ அந்த நபர் உள்ளடங்க) ஒருவரைப் பற்றிய தகவல்களை TIS National சட்டப் பிரகாரம் வெளிப்படுத்தக்கூடும்.

இந்தத் ‘தகவல் பாதுகாப்பு அறிவிப்’(Privacy Notice)பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தவிர மற்றபடி வெளிநாட்டுப் பெறுநர்கள் எவருக்கும் ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை TIS National பொதுவாக வெளிப்படுத்தாது.

வலைத்தலத் தரவுகள்

வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட தொழில்நுட்ப ஒத்தாசையுடன் TIS National இந்த வலைத்தலத்தினை இயக்குகிறது.

இந்தத் தலத்திற்கு நீங்கள் விஜயம் செய்யும் பொழுது, உங்களுடைய வருகை பதிவு செய்யப்படும். புள்ளி-விவர நோக்கங்களுக்காக தகவல்கள் பதிவு செய்யப்படும், அத்துடன் பின் வரும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும்:

  • தல அணுகலைக் கண்காணிக்க
  • மிக அதிகமாக/மிகக் குறைவாக அணுகப்படும் தகவல்கள் யாவை என்பதைக் கண்டறிய
  • இந்தத் தலத்தினைப் பாவிக்கும் பயனர்களது அனுபவத்தினை மேம்படுத்த.

இந்த வலைத்தலத்திற்குள் நீங்கள் செல்லும் பொழுது நாங்கள் பதிவு செய்யும் தகவல்களில் பின் வருவன உள்ளடங்கலாம்:

  • உங்களுடைய ‘ஐ.பீ’ (IP) அல்லது ‘சர்வர் முகவரி’ (server's address)
  • தலத்திற்கு நீங்கள் விஜயம் செய்த திகதி மற்றும் நேரம்
  • நீங்கள் அணுகிப் பெற்ற வலைப்பக்கங்கள்
  • இதற்கு முன்பு நீங்கள் எமது வலைத்தலத்திற்கு விஜயம் செய்துள்ளீர்களா, மற்றும், அப்படியானால், எவ்வளவு அடிக்கடி மற்றும் எப்போது என்பது
  • உங்களுடைய கணினியின் ‘இயக்க முறைமை’ (operating system) (உதாரணத்திற்கு, Windows 8, Mac OS X, மற்றும் ஏனையவை)
  • உங்களுடைய ‘வலையுலாவி (web browser)-யின் வடிவுரு (version) மற்றும் அதன் மாதிரி (உதாரணத்திற்கு, Mozilla Firefox, Internet Explorer, Google Chrome, மற்றும் ஏனையவை)
  • உங்களுடைய ‘மொபைல்’ சாதனத்தின் வர்த்தகப்-பெயர் மற்றும் மாதிரி (பயன்படுத்தப்பட்டால்)
  • தகவல்களை உங்களுக்கு அனுப்ப எடுத்துக்கொள்ளப்பட்ட நேரம்
  • எந்த இணைய முகவரியிலிருந்து இந்த வலைத்தலத்திற்குச் சென்றீர்களோ, அந்த இணைய முகவரி
  • உங்களுடைய வயது, பாலினம், மொழி மற்றும் நீங்கள் இருக்கும் இடம் (மாநகரம், நகரம்)
  • உங்களது ஆர்வங்கள். 

பின் வரும் விடயங்களில் எமக்கு உதவுவதற்காக இந்தத் தகவல்கள் பயன்படுத்தப்படும்: 

  • எமது சேவைகளைப் பயன்படுத்துவோரைப் பற்றி இன்னும் நன்கு விளங்கிக்கொள்ள
  • எமது வலைத்தலத்திலுள்ள துண்டிக்கப்பட்ட இணைப்புகள் (broken links), ‘அடைப்புகள்’ (bottlenecks) மற்றும் ஏனைய வலைத்தலப் பிரச்சினைகளைக் காண
  • நீங்கள் திறமையாய்ப் பயன்படுத்தும் விதத்தில் எமது வலைத்தலத்தினைப் பராமரிக்க. 

எமது இணைய வசதியைத் தகாத வழியில் பயன்படுத்தியதைப் பற்றிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்படும் தருணம், அல்லது ‘இணைய சேவை வழங்குநரது பதிவுக’(Internet Service Provider's logs)ளை ஆய்வு செய்வதற்கான ‘எழுத்தாணை’ (warrant) ஒன்றை சட்ட அமலாக்க முகமை ஒன்று பிரயோகிக்கும் தருணம் ஆகியவற்றைத் தவிர, உங்களுடைய வலையுலா செயல்பாடுகளை வைத்து உங்களை அடையாளம் காண்பதற்கான முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படாது.  

குக்கீஸ்’ (வலைத்தலக் கோப்புகள்) (Cookies)

வலைத்தல அமர்வு ஒன்றின் மூலமாக பயனர் ஒருவருடன் தொடர்பினைப் பராமரித்துவருவதற்காக ‘குக்கீஸ்’ எனப்படும் வலைப்பக்கப் பெயர்களைக் கொண்ட கோப்புகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். ‘குக்கீ’  என்பது எம்மால் கொடுக்கப்படும் ஒரு கோப்பு, மற்றும் எமது வலைத்தலத்தை நீங்கள் அணுகும் பொழுது உங்களுடைய கணினியிலுள்ள வலையுலாவி (browser) மென்-செயலியினால் அது சேமிக்கப்படுகிறது. ‘குக்கீஸ்’ என்பவை யாவை மற்றும் அவை எவ்வாறு செயலாற்றுகின்றன என்பதைப் பற்றிய விளக்கமொன்றை ‘தகவல் பாதுகாப்பு ஆணைய’(Privacy Commissioner)ரது தலத்தில் நீங்கள் காணலாம். எமது வலைதலத்தினை நீங்கள் பார்வையிடும் பொழுது,  இணையத்தைப் பயன்படுத்தும் ஒரு நபராக உங்களை அடையாளம் காண ‘குக்கீஸ்’ எமக்கு உதவுகின்றன. 

இந்த வலைத்தலத்தினால் இரண்டு வகையான ‘குக்கீ’கள் பயன்படுத்தப்படலாம்: 

‘வலைத்தலப் பயன்பாட்டு நேர ‘குக்கீ’கள்’ (Session cookies)

குறிப்பிட்டதொரு வலைத்தலத்தினை ஒருவர் பயன்படுத்தும் நேரத்திற்கு மட்டும் இவை நீடிக்கும். உங்களுடைய இணையப் பயன்பாட்டினை நீங்கள் முடித்துக்கொள்ளும் பொழுது, அல்லது உங்களுடைய கணினியை நீங்கள் நிறுத்தும் பொழுது அனைத்து ‘குக்கீ’களும் இல்லாமல் போய்விடும். கணினியை நீங்கள் கடைசியாகப் பயன்படுத்தியதிலிருந்து இருபது நிமிடங்களுக்குப் பிறகு உங்களைப் பற்றிய தகவல்களைக் கொண்ட எமது பிரதி தானாகவே நீக்கப்பட்டுவிடும். எமது வலைத்தல முறைமைகளை இன்னும் திறமையாகப் பயன்படுத்த உங்களுக்கு உதவுவதற்காக மட்டுமே இந்தத் தகவல்கள் பயன்படுத்தப்படும், இணையத்தின் ஊடான உங்களுடைய உலாவலைப் பின்தொடர்ந்து அதைக் கண்டறிவதற்காக, அல்லது உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களைப் பதிவு செய்வதற்காக அல்ல. 

‘நீடிக்கும் ‘குக்கீ'கள்' (Persistent cookies) 

இறுதியுறுவதற்கு முன்பாக இவை குறிப்பிட்டதொரு நேரத்திற்கு (பொதுவாக, தற்போதைய வலைத்தலப் பயன்பாட்டு நேரம் முடிவுற்ற பிறகும்) நீடிக்கும். 

நபர் ஒருவரை அடையாளம் காண்பிக்கக்கூடிய தகவல்கள் எதுவும் இந்த வலைத்தலத்தில் பயன்படுத்தப்படும் ‘குக்கீ'களுக்குள்ளாக இருப்பில் வைக்கப்படுவதில்லை. இணைய சேவை வழங்குநரது பதிவுகளை ஆய்வு செய்து விசாரிப்பதற்காக எழுத்தாணை ஒன்றை சட்ட அமலாக்க முகமை ஒன்று பாவிக்கும் தருணத்தைப் போன்ற காரணங்களை முன்னிட்டு சட்டப்படியான நிர்ப்பந்தம் ஏற்பட்டாலொழிய அநாமதேயப் பயனர்களை, அல்லது அவர்களது வலையுலா நடவடிக்கைகளை அடையாளம் காண்பதற்கான முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படாது. 

‘கூகுள்' பகுப்பாய்வு-முறைமை’ (Google Analytics)

எமது வலைத்தலத்தைப் பயன்படுத்தும் பொழுது நீங்கள் பெறும் அனுபவத்தினை மேம்படுத்த உதவும் அறிக்கைகளைப் பெறுவதற்காக Google Analytics எனும் இணையப் பகுப்பாய்வு சேவையையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். 

வலைத்தலத்தினைப் பயனர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பகுப்பாய்வு செய்வதில் உதவுவதற்காக உங்களுடைய வலையுலா(browser)வியில் Google Analytics ‘குக்கீ'களை அமர்த்தக்கூடும், அல்லது ஏற்கனவே அங்கு இருக்கும் ‘குக்கீ’களை அது வாசிக்கக்கூடும். வலைத்தலத்தை நீங்கள் பயன்படுத்தும் விதத்தைப் பற்றி இந்த ‘குக்கீ’யால் உற்பத்தி செய்யப்படும் தகவல்கள் (உங்களுடைய IP முகவரி உள்ளடங்க) Google -இற்கு அனுப்பப்படும், மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு வெளியில் இருக்கக்கூடிய ‘வழங்கி’(server)-களில் அவை இருப்பில் வைக்கப்படும். 

எமது வலைத்தலத்தினை நீங்கள் பயன்படுத்துவதைப் பற்றிய மதிப்பீட்டைச் செய்யவும், வலைத்தலங்களை இயக்குபவர்களுக்காக வலைத்தல நடவடிக்கைகளைப் பற்றிய அறிக்கைகளைத் தொகுக்கவும், வலைத்தல நடவடிக்கை மற்றும் இணையப் பயன்பாடு ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட மற்ற சேவைகளை அளிக்கவும் இந்தத் தகவல்களை Google பயன்படுத்தும். வலைத்தல விஜயங்கள் குறித்த தரவுகளை Google எவ்வாறு செயல்முறைப்படுத்துகிறது என்பதைப் பற்றி இங்கே (here) நீங்கள் மேலும் தெரிந்துகொள்ளலாம். 

‘குக்கீ’களை நீங்கள் ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா இல்லையா என்ற தெரிவினை நீங்கள் மேற்கொள்ள பெரும்பாலான வலையுலாவி(browser)கள் உங்களை அனுமதிக்கும். உங்களுடைய கணினியில் ‘குக்கீ’கள் எதுவும் அமர்த்தப்படக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், இந்த வலைத்தலத்தினை நீங்கள் அணுகுவதற்கு முன்பாக அனைத்து ‘குக்கீ’களையும் நிராகரிப்பதற்கான தெரிவு-முறைகளை உங்களுடைய வலையுலாவி விருப்பத்தெரிவு(browser preference)களில் தயவுசெய்து ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இப்படிச் செய்தால், இந்த வலைத்தலத்தின் முழு இயக்கத்தினையும் உங்களால் பயன்படுத்த இயலாமல் போகலாம் என்பதைத் தயவு செய்து கவனியுங்கள். 

மாறாக, நீங்கள் வலைத்தலங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது ‘குக்கீ’கள் எவ்வாறு நிறுவப்படுகின்றன, மற்றும் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும், ‘குக்கீ’களையும், வலைத்தலத்தில் நீங்கள் அணுகிப் பெற்ற தரவுகளையும் எவ்வாறு நீக்குவது என்பதையும் நிர்வகிக்க பெரும்பான்மையான வலையுலா(browser)விகள் உங்களுக்கு ஏது செய்யும். அத்துடன், வெவ்வேறு வலைத்தலங்களுக்கு நீங்கள் செல்லும் பொழுது, வலைத்தலத்திற்குப்-பின்-வலைத்தலம் என்ற முறையில் ‘குக்கீ’களை நிர்வகிக்க உங்களை அனுமதிக்கும் ‘அமைப்பு’(setting)கள் உங்களுடைய வலையுலாவி(browser)யில் இருக்கக்கூடும். உதாரணத்திற்கு, தற்சமயம் உள்ள ‘குக்கீ’களை நீக்கவும், அனைத்து ‘குக்கீ’களையும் அனுமதிக்கவும் அல்லது தடுக்கவும், வலைத்தலங்களுக்கான ‘குக்கீ’ விருப்பத்தெரிவுகளை ஏற்படுத்திக்கொள்ளவும் Google Chrome -இல் உள்ள ‘அமைப்பு’(setting)கள் உங்களை அனுமதிக்கும். உங்களுடைய சாதனத்திலுள்ள ஆள்-அடையாளம் காண இயலாத அனைத்து ‘விண்டோ’க்களையும் நீங்கள் மூடிய பிறகு, தரிசிக்கப்பட்ட வலைதலங்களைப் பற்றிய Chrome வரலாறு அல்லது உங்களுடைய சாதனத்திலுள்ள ‘குக்கீ’கள் ஆகியவற்றை இருப்பில் வைக்காத ‘ஆள்-அடையாளம்-இல்லா விதம்’ (Incognito mode) ஒன்றையும் Google Chrome கொண்டுள்ளது. 

‘கூகுள் வரைபடங்கள்’ (Google Maps)

‘தகவல் பாதுகாப்புக் கொள்கை – தகவல் பாதுகாப்பு & நியமங்கள் - கூகுள்’ (Privacy Policy – Privacy & Terms – Google)-இல் கிடைக்கும் ‘தகவல் பாதுகாப்பு சட்டத்திற்கு உட்பட்ட Google Maps Application Programming Interface (API) எனும் செயலியையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். 

உங்களைப் பற்றிய தனிப்பட்ட விபரங்களை அடைவது அல்லது அவற்றில் திருத்தம் ஏற்படுத்துவது அல்லது தகவல் பாதுகாப்பு குறித்த முறைப்பாடு ஒன்றைச் செய்வது எவ்வாறு

‘தகவல் பாதுகாப்பு சட்டம்’ (Privacy Act) அல்லது ‘தகவல் சுதந்திர சட்டம் 1982’ (Freedom of Information Act 1982 (FOI Act))-இன் கீழ் TIS National பதிவுகளில் உள்ள  உங்களைப் பற்றிய தகவல்களை அணுக வேண்டுமென நீங்கள் கேட்கலாம். 

உங்களைப் பற்றிய விபரங்கள் பின் வரும் விதத்திலானவை என நீங்கள் நினைத்தால், எம்மிடமுள்ள உங்களைப் பற்றிய விபரங்களில் மாற்றம் ஏற்படுத்துமாறு நீங்கள் எம்மைக் கேட்கலாம்: 

  • முழுமையற்றது, தவறானது, காலாவதியானது அல்லது தவறான பாதையில் இட்டுச்செல்லக் கூடியது என்றால்
  • நிர்வாக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதற்காகக் கிடைத்துவந்துள்ளது, கிடைத்துக்கொண்டிருக்கிறது அல்லது கிடைப்பில் உள்ளது என்றால், மற்றும்
  • குறிப்பிட்ட நபரது அடையாளம் குறித்து எவ்விதக் கேள்விக்கும் இடமளிக்காமல் இருந்தால்.

உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை அணுக மிகச் சிறந்த வழி அவற்றில் மாற்றம் ஏற்படுத்துவதற்கான, அல்லது ஒரு பதிவு சூழல்களைப் பொறுத்தது என்ற குறிப்பை இடுவதற்கான அனுமதியை நாடுவதேயாகும்.  

இதை எப்படிச் செய்வது, அல்லது உங்களைப் பற்றிய தகவல்களை TIS National தவறான முறையில் திரட்டியுள்ளது அல்லது கையாண்டுள்ளது என நீங்கள் நம்பினால் முறைப்பாடு ஒன்றை எப்படிச் செய்வது என்பதைப் பற்றிய மேலதிக விபரங்களைப் பெற, கீழ்க் காணும் தொடர்பு விபரங்களைப் பயன்படுத்தித் தயவுசெய்து எம்முடன் தொடர்புகொள்ளுங்கள். 

எம்மிடமிருந்து மொழிபெயர்த்துரைப்பு சேவைகளைப் பெறும் அமைப்பு ஒன்றின் தகவல் பாதுகாப்பு செயல்பாடுகள் சம்பந்தப்பட்ட கரிசனங்கள் ஏதும் உங்களுக்கு இருக்குமாயின், அவர்களது ‘தகவல் பாதுகாப்புக் கொள்கை’(privacy policy)யை வாசிக்குமறு உங்களை ஊக்குவிக்கிறோம். அவர்களுடைய தகவல் பாதுகாப்பு செயற்பாடுகளைப் பற்றிய முறைப்பாடு அல்லது விசாரிப்பு ஒன்றைச் செய்வது எப்படி என்பதைப் பற்றிய தகவல்கள் அதில் இருக்கவேண்டும். 

எம்முடன் தொடர்புகொள்வது எப்படி

இணைய-வழி பின்னூட்டல் படிவ’(online feedback form)த்தினை நிரப்புவதன் மூலம் நீங்கள் எம்முடன் தொடர்புகொள்ளலாம். 

மாறாக, பின் வரும் முகவரியில் நீங்கள் எமக்கு எழுதலாம்:

TIS National
Privacy Matters
GPO Box 241
Melbourne VIC 3001
Australia

மேலதிகத் தகவல்கள்

ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை ‘திணைக்களம்’ எவ்வாறு திரட்டுகிறது, இருப்பில் வைக்கிறது, பயன்படுத்துகிறது மற்றும் வெளிப்படுத்துகிறது என்பதைப் பற்றிய மேலதிகத் தகவல்களையும், அணுகல்கள் மற்றும் முறைப்பாடுகளைப் பற்றிய தகவல்களையும் http://www.homeaffairs.gov.au/privacy எனும் வலைத்தலப் பக்கத்தில் கிடைக்கும் ‘படிவம் 1442i – தகவல் பாதுகாப்பு அறிவிப்பு’ (Form 1442i – Privacy Notice) எனும் படிவத்திலும் எமது தகவல் பாதுகாப்புக் கொள்கை’யிலும் காணலாம்.