நிகழ்வு நடக்கும் இடத்தில் (ஒன் சைற்) உரைபெயர்த்தல்

குறிப்பிட்டதொரு இருப்பிடத்தில் கலந்துகொள்வதற்காக ஒன் சைற் (முகத்திற்கு நேர் முகம்) உரைபெயர்ப்பாளர்களை முன்கூட்டியே முன்பதிவுசெய்து கொள்ளலாம். அவுஸ்திரேலியாவிலுள்ள எந்தவொரு இருப்பிடத்திற்கும் ஒன் சைற் உரைபெயர்ப்பாளர்களை ஏற்பாடு செய்யலாம் (இது உரைபெயர்ப்பாளர் கிடைக்கும் தன்மையைப் பொறுத்தது).

நியமனத்திற்கு மூன்று மாதங்கள் வரை முந்தைய காலத்திலேயே ஒன் சைற் உரைபெயர்ப்பாளர் முன்பதிவுக் கோரிக்கையைச் சமர்ப்பிப்பதன் மூலம், பொதுவாக தமது ஆங்கிலம் அல்லாத மொழியைப் பேசுகின்ற வாடிக்கையாளருடன் தகவல்தொடர்பு கொள்ள வேண்டியுள்ள நிறுவனத்தால் ஒன் சைற் நியமனங்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன.

நிறுவனமொன்று உங்களுக்காக ஒரு ஒன் சைற் உரைபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்துள்ளது, ஆனால் நீங்கள் அந்த நியமனத்தை இரத்து செய்ய வேண்டுமென்றால், அதை நீங்கள் முடிந்தவரை விரைவில் அந்த நிறுவனத்திடம் தெரிவிப்பது அவசியமாகும். ஏனென்றால், நியமன நேரத்திற்கு முன்னர் குறைந்தது 24 மணித்தியாலங்களில் TIS National உடனான முன்பதியை அவர்கள் இரத்து செய்யவில்லை என்றால், அச்சேவைக்காக அவர்களிடமிருந்து கட்டணம் அறவிடப்படும்.