TIS National உடன் ஒரு தனிப்பட்ட கணக்கைப் பதிவுசெய்வது

நீங்கள் TIS National உடன் தனிப்பட்ட கணக்கை அமைக்கலாம் மற்றும் சேவைக்கு நீங்களே பணம் செலுத்தலாம்.

TIS National உடன் ஒரு தனிப்பட்ட கணக்கைப் பதிவுசெய்வது

TIS National உடன் ஒரு தனிப்பட்ட கணக்கைப் பதிவுசெய்வது

பெரும்பாலான மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்புச் சேவைகள் (TIS National) ஆங்கிலம் பேசாத வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. நீங்கள் பேச விரும்பும் சில நிறுவனங்கள் எங்களது உரைபெயர்ப்புச் சேவைகளுக்கு கட்டணங்களை ஏற்க முன்வராது போகலாம். நீங்கள் பேச விரும்பும் நிறுவனம் எங்கள் அழைப்புகளை ஏற்காமல் போனால், TIS National உடன் ஒரு தனிப்பட்ட கணக்கினை ஏற்படுத்தி சேவைக்கு நீங்களாகவே கட்டணம் செலுத்தலாம்.

நீங்கள் கதைக்க விரும்புகின்ற நிறுவனங்களில் சில, எங்களுடைய உரைபெயர்ப்புச் சேவைகளுக்கான கட்டணங்களை ஏற்றுக்கொள்ள விரும்பாமல் போகலாம். நீங்கள் கதைக்க விரும்புகின்ற நிறுவனம் எங்களுடைய அழைப்புகளை ஏற்காத சந்தர்ப்பங்களில், TIS National உடன் ஒரு தனிப்பட்ட கணக்கை உருவாக்குவதன் மூலம் நீங்களே அந்தச் சேவைக்குப் பணம் செலுத்த முடிவுசெய்யலாம். ஒரு தனிப்பட்ட கணக்கை உருவாக்க உங்களுக்கு ஒரு கடன் அட்டை தேவைப்படும்.

TIS National உடன் ஒரு கணக்கை உருவாக்கும் முன்னர், எங்களுடைய சேவைகள் கட்டணங்களைப் பாருங்கள்.

தனிப்பட்ட கணக்கை உருவாக்குவது எப்படி

  1. 131 450 என்ற இலக்கத்தில் TIS National ஐ அழையுங்கள்.
  2. உங்களுக்கு வேண்டிய மொழியைக் கூறுங்கள்.
  3. TIS National உடன் நீங்கள் ஒரு தனிப்பட்ட கணக்கை உருவாக்க வேண்டுமென்று உரைபெயர்ப்பாளரிடம் கூறுங்கள்.
  4. TIS National இற்கு உங்களுடைய பின்வரும் விபரங்களை வழங்குங்கள்:
    1. முழுப் பெயர்
    2. அவுஸ்திரேலிய தபால் விலாசம்
    3. தொலைபேசி இலக்கம்
    4. கடனட்டை விபரங்கள்.

உங்களுடைய வாடிக்கையாளரின் குறியீடு

உங்களுடைய கணக்கை உருவாக்கியதும், உங்களுக்கு ஒரு TIS National வாடிக்கையாளர் குறியீடு தரப்படும்.

உங்களுடைய வாடிக்கையாளர் குறியீடு என்பது ஒரு கணக்கு இலக்கத்தைப் போன்றது, TIS National சேவைக்கு நீங்கள் கட்டணம் கொடுக்க விரும்பும் ஒவ்வொரு தடவையும் அது தேவை. பதிவுசெய்யப்படாத பயனர்கள் உங்களுடைய கணக்கில் கட்டணங்களை அறவிடுவதைத் தவிர்ப்பதற்காக, உங்களுடைய வாடிக்கையாளர் குறியீட்டை ஒரு பாதுகாப்பான இடத்தில் வைப்பது அவசியமாகும்.

பணி இலக்கங்கள்

நீங்கள் ஒரு TIS National சேவைக்கு வேண்டுகோள் விடும் போது, ஒவ்வொரு உரைபெயர்ப்புச் சேவையின் மேற்கோளாகவும் ஒரு பணி இலக்கம் உங்களுக்குத் தரப்படும்.

புதிய உரைபெயர்ப்புப் பணி உருவாக்கப்படும் போது எங்களுடைய அமைப்பில் பணி இலக்கங்கள் தானாக உருவாக்கப்படுகின்றன, அவை உங்களுக்கும் உரைபெயர்ப்பாளருக்கும் வழங்கப்படுகின்றன. சேவையைப் பற்றிய பின்தொடர்வு விசாரணைகள் எதையும் நீங்கள் செய்யவேண்டியிருந்தால், அந்தச் சேவையில் ஒரு பதிவாக இந்த இலக்கத்தைக் குறித்து வையுங்கள்.