TIS National பயன்படுத்துவதில் உதவி

பல்வேறு TIS National சேவைகள் உள்ளன. குறைவான ஆங்கிலமொழிப் புலமையுள்ள யார் வேண்டுமானாலும் வணிகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைத்துக் கொள்வதற்கு உரைபெயர்ப்பாளருக்கான கோரிக்கையினைச் செய்யலாம்.

TIS National பயன்படுத்துவதில் உதவி

TIS National வாயிலாகநான்யாரைத்தொடர்புகொள்ளமுடியும்?

TIS National அவுஸ்திரேலியா எங்கிலும் பல்வகை முகமைகள் மற்றும் வணிகங்களுக்கு உரைபெயர்ப்புச் சேவைகளை வழங்குகிறது.

TIS National உடன் உள்நாட்டு விவகாரத்துறை உட்பட 90,000-க்கும் மேற்பட்ட முகமைக் கணக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

எங்கள் வாடிக்கையாளர்களில் சிலர்:

  • மாகாண மற்றும் மத்திய அரசுத் துறைகள்
  • உள்ளூர் மன்றங்கள்
  • மருத்துவ மற்றும் சுகாதார வல்லுநர்கள்
  • மருந்தகங்கள்
  • மின்சார நிறுவனங்கள்
  • தொலைதொடர்பு நிறுவனங்கள்
  • அவசரநிலைச் சேவைகள்
  • சட்டச் சேவைகள்
  • குடியிருப்பு மற்றும் சமூகச்சேவை வழங்குநர்கள்
  • நில அபிவிருத்தி முகமைகள்.

நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகமை அல்லது வணிக நிறுவனம் 131 450 அல்லாத ஒரு மொழிபெயர்ப்பாளர் சேவை தொலைபேசி எண்ணை வழங்கினால், TIS Nationalஐத் தொடர்புகொள்வதற்கு முன், அவர்களால் வழங்கப்பட்ட எண்ணை தயவுசெய்து அழைக்கவும். அவர்கள் மாற்று மொழிபெயர்ப்பாளர் சேவை வழங்குநரைப் பயன்படுத்தினால், TIS National ஆல் உங்கள் அழைப்பை இணைக்க முடியாமல் போகலாம்.

TIS National மூலம் முகமைகளையும் வணிக நிறுவனங்களையும் நான் எப்போது தொடர்புகொள்ள முடியும்?

TIS National சேவைகளை 24 மணி நேரமும் பெறமுடியும் என்றாலும், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் முகமை அல்லது வணிக நிறுவனம் செயல்படுகின்ற நேரத்தில் மட்டுமே நாங்கள் தொடர்பை ஏற்படுத்த முடியும்.

முகமை அல்லது வணிக நிறுவனத்தின் இணையதளத்திற்குச் சென்று முதலில் அவர்களின் செயல்பாட்டு நேரத்தைச் சரிபார்க்குமாறு நாங்கள் எப்போதும் பரிந்துரைக்கிறோம். எங்கள் முகமை வாடிக்கையாளர் இணையதளங்களில் சில, ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளிலும் தகவல்களை வழங்குகின்றன.

TIS National ஐ எப்போது தொடர்பு கொள்ள வேண்டும் என்பதற்கான பொதுவான வழிகாட்டி கீழே உள்ளது:

திங்கள்முதல்வெள்ளிவரைகாலை 9 மணிமுதல்மாலை 5 மணிவரை[AEST] - வழக்கமான வணிக நேரங்களுக்குள் பெரும்பாலான பதிவு செய்யப்பட்ட முகமைகள் மற்றும் நிறுவனங்களுடன் வழக்கமாக எம்மால் இணைப்பை ஏற்படுத்தித்தர முடியும். இதில் உள்நாட்டு அலுவல்கள் திணைக்களம் மற்றும் பிற அரசு சேவைகளும் அடங்கும்.

வணிகநேரம்அல்லதுவாரஇறுதிநாட்களில் - மருத்துவமனைகள் மற்றும் சில சுகாதாரச் சேவைகள் அல்லது காப்பீடு அல்லது பயன்பாடுகள் போன்ற வணிகங்களுடன் எம்மால் இணைக்க முடியும். இந்த நேரங்களின்போது அழைப்பதற்குமுன் முகமையின் இணையதளத்தைச் சரிபார்க்குமாறு பரிந்துரைக்கிறோம்.

பொதுவிடுமுறைகள்[ஆஸ்திரேலியாமுழுவதும்அல்லதுமாநிலவிடுமுறைகள்] - உங்கள் அழைப்பு அவசரமாக இல்லாவிட்டால், வழக்கமான வணிக நேரங்களில் காத்திருந்து அழைக்குமாறு பரிந்துரைக்கிறோம்.

TIS National என்னை இணைக்கும் உரைபெயர்ப்பாளரை நான் அறிந்திருந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?

உங்களுக்கு ஒதுக்கப்பட்ட உரைபெயர்ப்பாளர் உங்களுக்குத் தெரிந்தவர் எனில், உரைபெயர்ப்பு அமர்வினைத் தொடர விரும்புகிறீர்களா என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். அதே உரைபெயர்ப்பாளருடன் நீங்கள் தொடர விரும்பாவிட்டால், TIS National ஆபரேட்டரிடம் அல்லது நிறுவனத்திடம் சொல்லி அழைப்பைத் துண்டியுங்கள்.

ஓர்ஆண்அல்லதுபெண்உரைபெயர்ப்பாளரைநான்கோரலாமா?

ஆம். குறிப்பிட்ட பாலினத்தைச் சேர்ந்த உரைபெயர்ப்பாளர் உங்களுக்கு வேண்டுமெனில், TIS National ஆபரேட்டரிடம் அல்லது நிறுவனத்திடம் முடிந்தவரை விரைவாக நீங்கள் தொடர்புகொள்ள உள்ளீர்கள் என்று சொல்லுங்கள். TIS National நீங்கள் கோரிய பாலினத்தைச் சேர்ந்த உரைபெயர்ப்பாளரை வழங்க முயற்சிக்கும்.

நிறுவனங்கள்ஓர்உரைபெயர்ப்பாளரைவழங்கவேண்டுமா?

அவுஸ்திரேலியாவின் பல்லினக் கலாச்சார அணுகல் மற்றும் சமத்துவக் கொள்கையின்படி, அவுஸ்திரேலிய அரசுத்துறைகளுக்கும் முகமைகளுக்கும் குறைவான ஆங்கிலப் புலமையுள்ளோரின் தேவைகளுக்குப் பதிலளிக்கும் கடப்பாடு உள்ளது.

சில தனியார் நிறுவனங்கள் TIS National வசமிருந்து வரும் அழைப்புகளை ஏற்காமல் இருக்கலாம். எனினும் நீங்கள் நிறுவனத்தை நேரடியாக அழைத்தால், அவர்கள் தொலைபேசி உரைபெயர்ப்பாளருடன் உங்களைத் திரும்ப அழைக்கக்கூடும்.

TIS National வாடிக்கையாளராக இல்லாத ஒரு நிறுவனத்தை நீங்கள் தொடர்புகொள்ள விரும்பினால், அந்த நிறுவனம் அந்தச் சேவைக்கான கட்டணத்தை ஏற்கத் தயாராக இல்லையெனில், நீங்கள் TIS National உடன் ஒரு தனிப்பட்ட கணக்கைத் தொடங்கி நீங்களாகவே சேவைக்கான கட்டணத்தைச் செலுத்தலாம். TIS National உடன் ஒரு தனிப்பட்ட கணக்கைப் பதிவுசெய்வது எப்படி என்பதைக் கண்டறியுங்கள்.

வீடுமற்றும்குடும்பவன்முறைச்சூழ்நிலைகளுக்குஎத்தகையஉதவியைஅணுகலாம்?

வீடு மற்றும் குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை மற்றும் கட்டாயத் திருமணம் மற்றும் பாதுகாப்பாக இருப்பதற்கான பெண்ணின் உரிமை தொடர்பான அவுஸ்திரேலியச் சட்டங்கள் குறித்த தகவல்களைக் கொண்ட குடும்பப் பாதுகாப்புத் தொகுப்பை அவுஸ்திரேலிய அரசு உருவாக்கியுள்ளது.  இந்தத் தொகுப்பில் நான்கு தகவல்தாள்களும் ஒரு கதைப் பலகையும் அடங்கியிருக்கும். இது 46 மொழிகளில் கிடைக்கிறது.  இந்தக் குடும்பப் பாதுகாப்புத் தொகுப்பானது சமூகசேவைத் துறை இணையதளத்தில் கிடைக்கிறது.

ஓர் உரைபெயர்ப்பாளரைப் பயன்படுத்தி TIS National-உம் கூட பல்வேறு குடும்பச் சேவைகளுடன் உங்களை இணைக்க முடியும்.